கிருஷ்ணகிரியில் தல தோனி திறந்து வைத்த கிரிக்கெட் மைதானம்.. ஆகா.. இதுக்குத்தானா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிருஷ்ணகிரியில் தனக்கு சொந்தமான பள்ளியில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்திருக்கிறார் மஹேந்திர சிங் தோனி.
தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டனாகவும் தோனி தொடர்கிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் உள்ள தோனிக்கு சொந்தமான எம்.எஸ் தோனி குளோபல் ஸ்கூல்-ல் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் இன்று திறக்கப்பட்டது.
மைதானம்
இந்த மைதானத்தை திறந்துவைத்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான குளோபல் பள்ளியின் இணைப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். இதன்படி மாணவர்களுக்கு தொழில்முறை கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 ஏக்கருக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 8 பிட்சுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே சென்னை மற்றும் சேலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி மையங்கள் இருக்கும் நிலையில், தோனியின் பள்ளியில் புதிய மைதானம் திறக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் 1800 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மற்ற செய்திகள்