‘இத எப்டி அவுட்டுனு சொல்லுவீங்க’.. ஆட்டத்தோட மொத பந்தே மாஸ் காட்டுன ‘தல’ தோனி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

‘இத எப்டி அவுட்டுனு சொல்லுவீங்க’.. ஆட்டத்தோட மொத பந்தே மாஸ் காட்டுன ‘தல’ தோனி..!

13-வது சீசன் ஐபிஎல் தொடர் அபுதாபியில் இன்று (19.09.2020) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் தேர்வு செய்தது. அதன்படி செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக திவாரி 42 ரன்களும், டி காக் 33 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அம்பட்டி ராயுடு 71 ரன்களும், டு பிளிஸிஸ் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார். ஜடேஜா அவுட்டானதும் களமிறங்கிய சாம் குர்ரன் 6 பந்துகளில் 18 ரன்கள் (2 சிக்ஸர், 1 பவுண்டரி) அடித்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.

சாம் குர்ரன் அவுட்டானதும் களமிறங்கிய தோனி, தான் சந்தித்த முதல் பந்து கீப்பரிடம் கேட்ச் சென்றது. அதற்கு அம்பயர் அவுட் கொடுத்தார். உடனே தோனி DRS எனப்படும் மூன்றாவது அம்பயரிடம் ரிவ்யூ கேட்டார். அப்போது பந்து கையில் படாமல் சென்றது தெரியவந்தது. இதனால் தோனிக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் “DRS DRS dhaan! #DhoniReviewalSystem” என தோனியின் ரிவ்யூ குறித்து புகழந்து பதிவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்