Darbar USA

ரசிகர்களின் இதயத்தை நொறுக்கிய... அரையிறுதிப் போட்டி ரன் அவுட்... முதல் முறையாக சைலன்ஸை உடைத்த தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் சர்ச்சை குறித்து முதல்முறையாக இந்திய அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.

ரசிகர்களின் இதயத்தை நொறுக்கிய... அரையிறுதிப் போட்டி ரன் அவுட்... முதல் முறையாக சைலன்ஸை உடைத்த தோனி!

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிபெற 240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே தடுமாறிய இந்திய அணி, முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து ரசிகர்களின் நம்பிக்கையை குலைத்து வந்தது.

இந்த தடுமாற்றத்தை அணியின் மூத்த வீரரான தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நம்பிக்கை அளிக்கும்விதமாக ஆடி ரன் ரேட்டை உயர்த்தி வந்தனர். 77 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழக்க, ஒட்டுமொத்த நம்பிக்கையையும் தோனியே ஏற்று ஆடிவந்தார். 49-வது ஓவரில் முதல் பந்திலே சிக்ஸர் அடித்த தோனி, 3-வது பந்தில், இரண்டாவது ரன் எடுக்க ஓட முற்பட்டபோது, குப்திலின் அபாரமான த்ரோவால் நூலிலையில் தோனி ரன் அவுட் ஆனார். இதில் தோனி மட்டுமில்லாது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இதயத்தை நொறுக்கியது. தோனியும் கண்களில் கண்ணீருடன் வெளியேறினார்.

உலகக் கோப்பை கனவு நூலிலையில் தகர்ந்தது குறித்து, ‘இந்தியா டூடே’ இதழின் பத்திரிக்கையாளரான போரியா மசூம்தாரிடம் முதன் முறையாக மனம் திறந்து தோனி பேசியுள்ளார். அதில் ‘என்னுடைய முதல் போட்டியில் நான் ரன் அவுட் ஆனேன். இந்தப் போட்டியிலும் நான் ரன் அவுட் ஆகியுள்ளேன். நான் ஏன் டைவ் செய்யவில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அந்த 2 இன்ச் தூரம் (two inches) தானே. அதனை நீ டைவ் செய்திருக்க வேண்டும் தோனி என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டே இருக்கிறேன்’ என்று தோனி கூறியுள்ளார். உலகக் கோப்பையில்  தோனி விக்கெட்டை இழந்தப் பிறகு வெறும் 18 ரன்களில் இந்தியாவின் உலகக் கோப்பை கனவு கலைந்தது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, ICCWORLDCUP2019, WORLDCUPINENGLAND, HEARTBREAKING, SILENCE