மறுபடியும் தோனியால் தவறவிட்ட இந்தியா..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயின் விக்கெட்டிற்கு ரி-வியூ கேட்காமல் விட்டது குறித்து தோனியை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று பிர்ன்மின்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 111 ரன்களும், ஜேசன் ராய் 66 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியனர். முதல் 10 ஓவர்களுக்கு இந்தியா அணியால் ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் போட்டியின் 11 -வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அந்த ஓவரின் 5 -வது பந்தை எதிர்கொண்ட ஜேசன் ராயின் கை க்ளவுஸில் பந்து பட்டு தோனியின் கைக்கு சென்றது.
இதனால் உடனடியாக இந்திய வீரர்கள் அவுட் என அம்பயரிடம் முறையிட்டனர். ஆனால் அம்பயர் அவுட் இல்லை என மறுத்துவிட்டார். அதனால் ஹர்திக் பாண்ட்யாவும், கோலியும் ரி-வியூ கேட்கலாம் என தோனியிடன் கூறினர். ஆனால் தோனி வேண்டாம் என மறுத்துவிட்டார். ஆனால் ரி-வியூவில் பந்து கை க்ளோஸில் பட்டு செல்வது தெளிவாக தெரிந்தது. இதனால் அப்போது இந்திய அணி ஒரு விக்கெட் வாய்ப்பை இழந்தது.
Jason Roy GETS LUCKY !!
India appeal for a catch down the leg-side. The umpire signals a wide. And India DON'T review. UltraEdge shows a big spike.
👉 https://t.co/FAUfcH9c3y #CWC19 #ENGvIND
— Cricbuzz (@cricbuzz) June 30, 2019
@BCCI Wr is dhoni review system now pic.twitter.com/4FFzuAj22W
— ganesh (@ganeshkom) June 30, 2019
Dhoni review system 👎
Come on #AleemDar , if u decides like this how can ur @TheRealPCB gets chance of semi's 😂😂#TeamIndia #CWC19#BleedOrange #ENGvIND #MSDhoni #ViratKohli pic.twitter.com/5jlwfRJXNs
— Mithun Talwar (@MithunTalwar) June 30, 2019