VIDEO: ‘டெய்லியும் இங்க வந்தா ஒன்னு கூட மிஞ்சாது’!.. ரொம்ப நாள் கழிச்சு ‘தல’ பதிவிட்ட வீடியோ.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி தனது தோட்டத்தில் விளைந்த ஸ்டாபரியை சாப்பிடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘டெய்லியும் இங்க வந்தா ஒன்னு கூட மிஞ்சாது’!.. ரொம்ப நாள் கழிச்சு ‘தல’ பதிவிட்ட வீடியோ.. ‘செம’ வைரல்..!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின் விவசாயத்தில் தோனி கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ராஞ்சியில் இருக்கும் தனது வீட்டில் 10 ஏக்கரில், பிரேத்யமாக நிலத்தை ஒதுக்கி விவசாயம் செய்து வரும் தோனி தக்காளி, முட்டைக்கோஸ், பட்டாணி உள்ளிட்ட பல வகை காய்கறிகளை விளைவிக்கிறார். இந்தக் காய்கறிகள் ஜார்கண்ட்டின் உள்ளூர் தேவைக்காக கொண்டு செல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அரபு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

இந்நிலையில் தற்போது தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பண்ணைத் தோட்டத்தில் விளைவித்த ஸ்டாபரியை சாப்பிடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் தொடர்ந்து பண்ணைக்குச் சென்றால் தோட்டத்தில் ஒரு ஸ்டாபரி கூட மிஞ்சாது’ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோயை தோனி பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது.

மற்ற செய்திகள்