அந்த சிம்ப்ளிசிட்டி தான்.. பிரபல ரஜினி பாடல் பின்னணியில் ஒலிக்க என்ட்ரி கொடுத்த தோனி.. CSK அணி பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னையில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. 

அந்த சிம்ப்ளிசிட்டி தான்.. பிரபல ரஜினி பாடல் பின்னணியில் ஒலிக்க என்ட்ரி கொடுத்த தோனி.. CSK அணி பகிர்ந்த வீடியோ..!

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | The Elephant Whisperers : ஆஸ்கர் வென்ற இந்திய பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி போஸ்ட்.. !

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.

இந்நிலையில் பயிற்சியில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தோனி இன்று சென்னை வந்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

MS Dhoni during Practice amid of starting IPL Video goes viral

Images are subject to © copyright to their respective owners.

MS தோனி

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி இதுவரையில் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4978 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இதில் 24 அரை சதங்களும் அடங்கும்.

MS Dhoni during Practice amid of starting IPL Video goes viral

Images are subject to © copyright to their respective owners.

மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும்போதும், பொறுமையுடன் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதில் தோனி ஒரு வித்தைக்காரர். இதன் காரணமாகவே ரசிகர்கள் தோனியை கூல் கேப்டன் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அழைக்கின்றனர்.

வீடியோ

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில், பயிற்சியின் இடையே கேன்டீனுக்குள் நுழையும் தோனி, தேநீர் கோப்பையை பெற்றுக்கொண்டு, ஊழியர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியபடி அங்கிருந்து நடந்து செல்கிறார். பின்னணியில் குசேலன் படத்தில் வரும் சினிமா சினிமா பாடல் ஒலிக்க தோனி நடந்து செல்லும் வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் பகிர, இது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "இந்தியாவுக்கு கிடைத்த பெருமை".. ஆஸ்கர் விருது வென்ற இந்திய கலைஞர்கள்.. பிரதமர் மோடி வாழ்த்து..!

CRICKET, MS DHONI, IPL

மற்ற செய்திகள்