‘அன்னைக்கு அப்பா.. இன்னைக்கு மகன்’.. ஆனா தோனியின் ஸ்டெம்ப்பிங் மட்டும் மிஸ்ஸே ஆகல!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர் ரியான் பராக் 17 வயதே நிரம்பியவர்.
சிஎஸ்கே-வுக்கு எதிராக மிக அண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாண்ட போட்டியில் அறிமுகமான ரியான் பராக், 16 ரன்கள் எடுத்தபோது அவரை கேட்ச் பிடித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அவரின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்தப் போட்டிக்குப் பின் கேப்டன் தோனியுடன் ரியான் பராக் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். முன்னதாக ரியான் சிறுவயதில் தோனியுடன் புகைப்படம் எடுத்திருந்தார்.
தற்போது தோனியுடனே தோனிக்கு எதிரான போட்டியிலேயே, விளையாடும் வாய்ப்பை ரியான் பராக் பெற்றிருக்கிறார் என்பதாலேயே இந்த புகைப்படம் வைரலானது. இந்த நிலையில் இணையத்தில் வாயிலாக ஒரு சுவாரசியமான தகவல் தற்போது கசிந்துள்ளது.
அதன்படி, ரஞ்சிக் கோப்பையில் தோனிக்கு எதிரான ஒரு அணிக்காக விளையாடிய கிரிக்கெட் பிளேயர்தான் ரியான் பராக்கின் தந்தை. இவர் அந்த அணிக்காக விளையாடிய போது ரியானுக்கு 3 வயதே ஆகி இருந்துள்ளது. அப்போததான் தோனியுடன் ரியான் புகைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால் பீஹாருக்காக தோனி ஆடிய இந்த ரஞ்சிக்கோப்பை போட்டியில் ரியான் பராக்கின் தந்தை பராக் தாஸை 30 ரன்களில் தோனி ஸ்டெம்பிங் செய்து அவருடைய விக்கெட்டை எளிதாக கைப்பற்றி பீஹார் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் நடந்த போட்டியில் ரியான் பராக்கின் தந்தை பராக் தாஸை ஸ்டம்பிங் ஆட்டமிழக்கச் செய்த தோனி அவருடைய மகன் ரியானின் விக்கெட்டையும் தற்போது ஸ்டெம்ப் அவுட் செய்து தோனி கைப்பற்றியது பற்றி, கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ட்விட்டரில் பதிவிட்டதை அடுத்து இந்த தகவல் வைரலாகி வருகிறது.