முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனி செஞ்ச சம்பவம்.. 15 வருசமா தொட முடியாத ரெக்கார்டு.. மிரண்டு போன ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக சமீபத்தில் நடந்து முடிந்தது.

முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனி செஞ்ச சம்பவம்.. 15 வருசமா தொட முடியாத ரெக்கார்டு.. மிரண்டு போன ரசிகர்கள்!!

Also Read | BOXING DAY: கொளுத்தும் வெயில் & 155 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து.. அடுத்தடுத்து காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. பரபரப்பான சம்பவங்கள்!

முன்னதாக, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்றது.

இந்த மினி ஏலத்தில் ஏராளமான வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதில், சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிக தொகையாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

MS Dhoni bid by all team in 2008 ipl auctions record

இது தவிர, இன்னும் பல இளம் வீரர்கள் பெரிய அளவில் யாரும் எதிர்பாராத அளவில் அதிக தொகைக்கு ஏலம் போய் வியப்பையும் ஏற்படுத்தி இருந்தனர். பொதுவாக, ஐபிஎல் தொடர் என்றாலே அதற்காக நடைபெறும் ஏலம் என்பது மிகப் பெரிய பங்கு வகிக்கும். ஒரு வீரர் எந்த அணிக்காக ஆட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இந்த ஏலத்தில் சிறந்த வீரர்களை அணியில் எடுக்க கடுமையான போட்டிகளும் அணி நிர்வாகத்தினரிடையே நிலவும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இருந்தே ஏல முறை கடைபிடிக்கப்பட்டு தான் வருகிறது. முதல் ஏலத்தின் போது தோனி, சச்சின், சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தனர். அந்த வகையில், முதல் ஐபிஎல் எலத்தில் தோனி செய்த சாதனை ஒன்று, இத்தனை ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் விஷயம், ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

MS Dhoni bid by all team in 2008 ipl auctions record

ஒரு வீரர் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்படப்படும் போது, அவரை எடுக்க ஒரு சில அணிகள் போட்டி போடும். ஆனால், தோனி பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட போது அவரை அணியில் எடுக்க மொத்தம் இருந்த 8 ஐபிஎல் அணிகளையும் போட்டி போட்டது. அதிலும், மும்பை மற்றும் சென்னை அணிகள் மாறி மாறி போட்டி போட, கடைசியில் சென்னை அணி சொந்தமாக்கி இருந்தது.

முதல் ஐபிஎல் ஏலம் முடிந்த பின்னர், இதுவரை 16 ஏலம் நடந்து முடிந்துள்ளது. ஆனால், தோனிக்கு பிறகு எந்தவொரு வீரரை அணியில் சேர்க்கவும் அனைத்து அணிகளும் போட்டி போட்டதே கிடையாது. சுமார் 15 ஆண்டுகளாக இந்த சிறப்பை வைத்துள்ள தோனியை பலரும் மிரண்டு போய் பார்த்து வருகின்றனர்.

Also Read |17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸால் வாங்கப்பட்ட கேமரூன் க்ரீன்.. டெஸ்ட் போட்டியில் காயம்.. ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை?

CRICKET, IPL AUCTION, MS DHONI

மற்ற செய்திகள்