IPL 2022 : கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. ஐபிஎல் Start ஆகுறதுக்கு முன்னாடி தோனி சொன்ன விஷயம்.. "கரெக்டா Connect ஆகுதே"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், நேற்று (29.05.2022) முடிவடைந்திருந்த நிலையில், புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

IPL 2022 : கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. ஐபிஎல் Start ஆகுறதுக்கு முன்னாடி தோனி சொன்ன விஷயம்.. "கரெக்டா Connect ஆகுதே"

Also Read | ‘9 மாசமா கணவரை காணோம்’.. கைதான மனைவி கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!

குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கி இருந்தது.

இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பத்தில் இருந்தே தொடர் வெற்றிகளைக் குவித்து வந்தது.

லீக் சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த குஜராத் அணி, முதல் குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதன் பின்னர், இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான், குஜராத் அணியை மீண்டும் எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 130 ரன்கள் மட்டுமே எடுக்க, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி நிதானமாக ஆடி, 19 ஆவது ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டிப் பிடித்தது.

ms dhoni ad for ipl 2022 gone viral after GT Win

முதல் ஐபிஎல் சீசனையே வெற்றி சீசனாக மாற்றியுள்ள குஜராத் அணியை கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே போல, ஹர்திக் பாண்டியாவின் தலைமை குறித்தும், பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான விளம்பரம் ஒன்றில், தோனி தெரிவித்துள்ள கருத்தினை குறிப்பிட்டு, குஜராத் அணி வெற்றி குறித்த சுவாரஸ்ய விஷயம் ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஐபிஎல் தொடர் என்றாலே, பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படுபவை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.

ms dhoni ad for ipl 2022 gone viral after GT Win

மும்பை 5 முறையும், சென்னை அணி 4 முறையும் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது. ஆனால், நடப்பு தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள், கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்தது. இதில், ஒரு அணியாவது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில், இந்த முறை அது நிகழவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தோனி நடித்திருந்த விளம்பரம் ஒன்றை ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகின்றனர்.

அதில் வரும் விளம்பரம் ஒன்றில், "இங்க Blue (மும்பை) மற்றும் Yellow (சென்னை) மட்டும் தான் வெடிக்கும்ன்னு நெனச்சீங்களா?. இங்க எது வேணா வெடிக்கலாம்" என குறிப்பிட்டிருப்பார். அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகள் மும்பை (3 முறை) மற்றும் சென்னை (2 முறை) அணிகள் தான் கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.

ms dhoni ad for ipl 2022 gone viral after GT Win

ஆனால், இந்த முறை எந்த அணிகள் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதைத் தான் தோனி அப்படி குறிப்பிட்டிருப்பார். அவர் விளம்பரத்தில் குறிப்பிட்டதை போலவே, சென்னை மற்றும் மும்பை அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற, பெங்களூர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதில், குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | IPL 2022 ஃபைனல்ஸ் : "2011 'WC' Finals கூட இவ்ளோ கனெக்ஷன் இருக்கா??.." குஜராத் அணி பகிர்ந்த ட்வீட்.. இப்போ செம வைரல்

CRICKET, MS DHONI, IPL 2022, GT WIN

மற்ற செய்திகள்