ஜடேஜாவின் தில்லான கேட்ச்.. 10 வருஷத்துக்கு முன்னாடியே தோனி போட்ட ட்வீட்.. இதுனால தான் அவரை கொண்டாடுறாங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜடேஜா குறித்து தோனி 10 வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்த ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஜடேஜாவின் தில்லான கேட்ச்.. 10 வருஷத்துக்கு முன்னாடியே தோனி போட்ட ட்வீட்.. இதுனால தான் அவரை கொண்டாடுறாங்க..!

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது.

இதையடுத்து சென்னையில் லக்னோவை எதிர்கொண்டது CSK. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில் நேற்று வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேவரைட் ஆப்போஸிஷன் அணியான மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடியது. எல் கிளாசிக்கோ என அழைக்கப்படும் இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் அதிரடியாக இருந்தாலும் ஜடேஜா, சாண்ட்னரின் மந்திர சூழலில் மும்பை சிக்கி சின்னாபின்னமானது.

இதன் பலனாக அந்த அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சென்னை அணி சேஸிங்கில் இறங்கியது. கான்வே டக்கில் வெளியேறி அதிர்ச்சி அளித்தாலும் அடுத்துவந்த ரஹானே மும்பை பவுலர்களை அலறவிட்டார். 27 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 3சிக்ஸர்களும் அடக்கம். மற்றொருபுறம் ருதுராஜ் நிதானமாக ஆட, அவருடன் கரம்கோர்த்த ராயுடு அணியினை வெற்றிபெற செய்தார். 18.1 ஓவரில் சென்னை வெற்றி இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் ஜடேஜா தனது இரண்டாவது ஓவரை வீசும்போது கேமரூன் கிரீன் அதனை நேராக தூக்கி அடித்தார். வேகமாக வந்த பந்தை ஜடேஜா கேட்ச் பிடிக்க அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், 10 வருடங்களுக்கு முன்னர் தோனி போட்ட ட்வீட் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டில்,"ரவீந்திர ஜடேஜா கேட்ச் பிடிக்க ஓடுவதில்லை. பிந்து தானாகவே அவரது கைகளில் தஞ்சமடைந்துவிடுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

CSK, MS DHONI

மற்ற செய்திகள்