அசந்தா.. ஆப்புதான்.. "இந்திய பவுலர்களை.... முடியல.." - கதறும் தென்னாப்பிரிக்க வீரர் ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்ற நிலையில் கப் யாருக்கு? என்ற பரபரப்பான நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் களங்கண்டு வருகின்றன.
கடந்த 11 ஆம் தேதி துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் - மயங்க் அகர்வால் சொதப்பினாலும் புஜாரா - கோலி இணை பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தியது. இடைவெளிக்குப் பின்னர் அணிக்குத் திரும்பிய கோலி சதமடிக்காமல் திரும்புவதில்லை என்ற ரீதியில் கவனமுடன் ஆடினார். ஆனால், புஜாராவைத் தொடர்ந்து கிரீஸுக்கு வந்த யாரும் நிலைக்கவில்லை. அல்லது தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை நிலைக்க விடவில்லை.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 79 ரன்னில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார். இறுதியில் முதல் இன்னிங்ஸ்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை மட்டுமே எடுத்தது..
சமாளிக்கவே முடியல..
இதனையடுத்து முதல் இன்னிங்க்ஸை ஆட வந்த தென்னாப்பிரிக்க வீரர்களை இந்திய பவுலர்களும் தொடர்ந்து சோதித்தனர். கேப்டன் எல்கர் - மார்க்ரம் ஜோடியை 10 ரன்களிலேயே பிரித்தார் பும்ரா. அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன் யாராலும் இந்தியர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பெவிலியன் திரும்பினர். அந்த அணியின் கீகன் பீட்டர்சன் மட்டும் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இறுதியில் தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கீகன் பீட்டர்சன்," இந்திய பவுலர்களை எதிர்கொள்வது சவாலாக இருக்கிறது. சொல்லப்போனால் என் வாழ்விலேயே இதுபோன்ற ஒரு பவுலிங் அட்டாக்கை பார்த்ததில்லை. கொஞ்சம் கவனம் சிதறினாலும் அவர்கள் (இந்திய பவுலர்கள்) விக்கெட்டை வீழ்த்திவிடுகிறார்கள். மேலும், இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் ரன்களை எடுக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனாலேயே இந்தியா உலகின் சிறந்த பவுலிங் அணியாக இருக்கிறது. இருப்பினும் இப்போட்டியில் வெல்ல எங்களால் ஆன முழு உழைப்பையும் நாங்கள் வழங்குவோம்" என்றார்.
தற்போதைய ஸ்கோர்
13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸைத் துவங்கி விளையாடி வருகிறது. தற்போதைய நிலையில் 130 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரிஷப் பண்ட் 51 ரன்களுடனும் கேப்டன் விராட் கோலி 28 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்