தம்பி மைக்கை ஐஸ்க்ரீம்-னு நெனச்சுட்டான்😂.. மொரோக்கோ வீரர் பேசும்போது மகன் செஞ்ச கியூட்டான வேலை.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமொரோக்கோ கோல் கீப்பர் செய்தியாளர் ஒருவரிடம் பேசும்போது அவரது மகன் செய்த கியூட்டான வேலை பலரையும் புன்னகைக்க செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
அரையிறுதி சுற்றுக்குள் நுழையப்போவது யார் என தீர்மானிக்கும் போட்டியில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கலை எதிர்த்து விளையாடியது மொரோக்கோ. இந்த போட்டியில் 1 - 0 என்ற கணக்கில் மொரோக்கோ வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றிமூலம், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு தேர்வான முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை படைத்தது மொரோக்கோ. இருப்பினும் அரையிறுதியில் பிரான்ஸை எதிர்த்து களமிறங்கியது மொரோக்கோ. இதில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மொரோக்கோ அணியின் வெற்றிக்கு அந்த அணியின் கோல் கீப்பரான யாசின் பௌனௌ-வின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். சேம்பியன்ஸ் லீக் போட்டியில் இவர் பெனால்டி கிக்கை தடுத்த விதம் அப்போது ரசிகர்களிடையே வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று மூன்றாவது அணிக்கான போட்டியில் குரோஷியாவும் மொரோக்கோவும் மோதின. இந்த போட்டிக்கு முன்னர் செய்தியாளர் ஒருவர் யாசின் பௌனௌ-வை பேட்டி எடுத்தார்.
அப்போது யாசின் தனது மகனை வைத்திருந்தபடி பேசிக்கொண்டிருந்தார். தனது தந்தை பேசிக்கொண்டிருக்க, மைக்கை ஆர்வத்துடன் தொட்டுப்பார்த்த அந்த சிறுவன், அதனை ஐஸ் கிரீம் என நினைத்து நாவால் சுவைத்து பார்க்க இதனை கண்ட யாசின் சிரித்துவிட்டார். இந்த வீடியோவை FIFA அமைப்பு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
Yassine Bounou's son thinking the 🎤 to be 🍦 is supremely adorable! ❤️ #FIFAWorldCup pic.twitter.com/YTorvQwDvM
— FIFA World Cup (@FIFAWorldCup) December 14, 2022
மற்ற செய்திகள்