ருதுராஜ் 'ஜடேஜா'லாம் லிஸ்ட்லயே இல்ல...! தோனிக்கு பிறகு 'அடுத்த கேப்டன்' ஆக முழு தகுதி 'அவருக்கு' மட்டும் தான் இருக்கு...! - முன்னாள் வீரர் அதிரடி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியின் ஓய்வுக்கு பின்னர் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பெனசர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

ருதுராஜ் 'ஜடேஜா'லாம் லிஸ்ட்லயே இல்ல...! தோனிக்கு பிறகு 'அடுத்த கேப்டன்' ஆக முழு தகுதி 'அவருக்கு' மட்டும் தான் இருக்கு...! - முன்னாள் வீரர் அதிரடி...!

2021 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நான்காவது டைட்டில் பட்டத்தை வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Monty Benazir says who will be next captain of the csk team

இந்நிலையில் 2022-க்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ளதால் அது குறித்த கருத்துக்கள் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடத்தில் உரையாடி வருகின்றனர்.

2022 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டாலும், தோனியின் ஓய்வுக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக எந்த வீரர் இருந்தால் அணிக்கு பலமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

Monty Benazir says who will be next captain of the csk team

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பெனசர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது தோனிக்கு பின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.

Monty Benazir says who will be next captain of the csk team

அனைவரும் ஜடேஜா அல்லது ருத்ராஜ் ஆகிய வீரர்களை சென்னை அணியின் கேப்டனாக ஆக்குங்கள் என கூறி வந்த நிலையில், மாண்டி புதிய யோசனையாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மோயின் அலியை சென்னை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Monty Benazir says who will be next captain of the csk team

இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ஆவதற்கான மோயின் அலிக்கு முழுத் தகுதிகளும் உள்ளது. அதிலும் முக்கியமாக பேட்டிங் மற்றும் பவுலிங் போன்றவற்றிலும் மோயின் அலி மிக சிறப்பாக விளையாடி வருகிறார்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்