VIDEO: ‘ரத்தம் வர அளவுக்கு ஏற்பட்ட காயம்’!.. அப்போ அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தானா? இந்திய அணிக்கு எழுந்த புது சிக்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

VIDEO: ‘ரத்தம் வர அளவுக்கு ஏற்பட்ட காயம்’!.. அப்போ அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தானா? இந்திய அணிக்கு எழுந்த புது சிக்கல்..!

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவுக்கு (62 ரன்கள்) ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Mohammed Siraj suffers injury on his left hand during 1st T20I vs NZ

இந்த நிலையில், இப்போட்டியில் விளையாடிய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு (Mohammed Siraj) காயம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் போட்டியின் கடைசி ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை நியூஸிலாந்து வீரர் மிட்சல் சாண்ட்னர் ஸ்ட்ரைட்டாக அடித்தார். உடனே அந்த பந்தை முகமது சிராஜ் தடுக்க முயன்றார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது இடது கைவிரலில் பலமாக அடித்தது. இதனால் அவரது விரலில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. உடனே மைதானத்துக்கு வேகமாக வந்த பிசியோ, முகமது சிராஜின் கை விரலில் ஏற்பட்ட காயத்துக்கு முதலுதவி அளித்து பேட்டேஜ் ஒட்டினார். இதனைத் தொடர்ந்து பவுலிங் செய்த முகமது சிராஜ் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 1 விக்கெட் எடுத்து அசத்தினார்.

இந்த காயம் காரணமாக அடுத்த போட்டியில் முகமது சிராஜ் விளையாடுவாரா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

MOHAMMEDSIRAJ, INDVNZ

மற்ற செய்திகள்