வாக்கி டாக்கியில சிராஜ் அப்படி என்ன பேசியிருப்பாரு..? சிக்கிய ஒரே ஒரு போட்டோ.. வகை வகையாக ‘மீம்ஸ்’ போட்ட நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் முகமது சிராஜ் வாக்கி டாக்கியில் பேசிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாக்கி டாக்கியில சிராஜ் அப்படி என்ன பேசியிருப்பாரு..? சிக்கிய ஒரே ஒரு போட்டோ.. வகை வகையாக ‘மீம்ஸ்’ போட்ட நெட்டிசன்கள்..!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. இதனால் இரண்டாம் நாளில் இருந்து போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Mohammed Siraj’s picture talking on walkie talkie goes viral

இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டெவன் கான்வே களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மெதுவாக உயர்த்தி வந்தது. இதனால் இந்த கூட்டணியை பிரிக்க இந்திய அணி பல முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது அஸ்வின் வீசிய 35-வது ஓவரில் டாம் லாதம் (30 ரன்கள்) அவுட்டாகினார். இதனைத் தொடர்ந்து இஷாந்த ஷர்மாவின் ஓவரில் டெவன் கான்வேயும் (54 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.

Mohammed Siraj’s picture talking on walkie talkie goes viral

இதனை அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர். ஆனால் மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டியை முன்னதாகவே அம்பயர்கள் முடித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றைய 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது. தற்போது சவுத்தாம்ப்டனில் வானிலை சீராக உள்ளதால், இன்றைய 5-ம் நாள் ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohammed Siraj’s picture talking on walkie talkie goes viral

இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பெவிலியலின் அமர்ந்து வாக்கி டாக்கியில் பேசிய போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய முகமது சிராஜ், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனியர் வீரர்களின் வருகையால் ப்ளேயிங் லெவனில் அவர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்