வேற யாராச்சும் இருந்திருந்தா, என்ன தூக்கி போட்டுருப்பாங்க.. ஆனா அவரு செஞ்சதே வேற.. கோலியால் நெகிழ்ந்த இளம் வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி, சமீபத்தில் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்தும் அடுத்தடுத்து விலகி இருந்தார்.

வேற யாராச்சும் இருந்திருந்தா, என்ன தூக்கி போட்டுருப்பாங்க.. ஆனா அவரு செஞ்சதே வேற.. கோலியால் நெகிழ்ந்த இளம் வீரர்

ஸ்ட்ரிக்ட்டா இருந்த ஆசிரியர்.. 30 வருஷம் கழிச்சு மாணவன் எடுத்த ரிவெஞ்ச்.. பதறிப்போன போலீஸ் அதிகாரிகள்..!

தற்போது இந்திய அணியை, ரோஹித் ஷர்மா கேப்டனாக இருந்து, கோலியை போல அற்புதமாக வழிநடத்தி வருகிறார்.

முன்னதாக இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில், பெரிய அளவில் வெற்றிகளை குவிக்காமல் இருந்து வந்தது. ஆனால் கோலி இந்தியாவின் கேப்டனான பிறகு, டெஸ்ட் போட்டிகளில் பல மகத்தான சாதனைகளை இந்திய அணி படைத்திருந்தது.

நம்பர் 1 டெஸ்ட் அணி

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், வெற்றி வாகை சூடி தரவரிசை பட்டியலில் இந்திய அணி உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி,  டெஸ்ட் தரவரிசையில் நம்பர்-1 அணியாக விளங்கியதற்கு மிக முக்கிய காரணம் கோலி தான்.

mohammed siraj about virat kohli and become emotional

கோலியால் நெகிழ்ந்த சிராஜ்

அதேபோல கோலியின் கேப்டன்சியில், பும்ரா, ஷமி, இஷாந்த் ஷர்மா போன்ற பல வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் திறம்பட உருவானதற்கும் ஒரு காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது சிராஜ், கோலி குறித்த அசத்தல் கருத்தினை தற்போது தெரிவித்துள்ளார்.

மோசமான ஆண்டு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சிராஜ், தன்னுடைய முதல் டெஸ்ட் தொடரிலேயே பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பி இருந்தார். கோலி பற்றி பேசிய சிராஜ், "கடந்த 2018-ஆம் ஆண்டில் நான் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடி வந்தேன். எனது பந்து வீச்சு எடுபடாமல் போக, என்னுடைய மிக மோசமான ஆண்டாக அது அமைந்திருந்தது.

mohammed siraj about virat kohli and become emotional

அவர் இல்லன்னா நான் இல்ல

நிச்சயம் வேறு ஏது ஐபிஎல் அணிகளாக இருந்திருந்தால், அவர்கள் என்னை அணியில் இருந்து ஒதுக்கி இருப்பார்கள். சில நேரம் அணியில் இருந்து விடுவிக்கக் கூட செய்திருக்கலாம். ஆனால், பெங்களூர் அணியில் நடந்ததே வேறு. அந்த அணியின் கேப்டனான விராட் கோலி, எனக்கு முழுக்க முழுக்க ஆதரவளித்து, என்னை அணியில் தக்கவைத்துக் கொண்டார். எனது பவுலிங்கில் எனக்கு இருக்கும் தன்னம்பிக்கை, நான் இன்று என்னவாக உருவாகி இருக்கிறேன் என அனைத்துக்கும் முழுக்க முழுக்க காரணம் விராட் பாய் மட்டும் தான். இது எதுவும் அவர் இல்லை என்றால் நிச்சயம் நடந்திருக்காது.

mohammed siraj about virat kohli and become emotional

வித்தியாசமானவர்

அணியில் உள்ள பந்துவீச்சாளர்களுக்கு விராட் கோலி போன்ற ஒரு கேப்டன், நிச்சயம் அவசியம். ஒரு வேகப்பந்து வீச்சாளரின் எனர்ஜியில், திடீரென குறைவு ஏற்பட்டாலும், ஒரே ஒருமுறை அவர்கள் விராட் கோலியை பார்த்தால் போதும். ஒட்டுமொத்த எனர்ஜியும் திரும்ப வந்துவிடும். அவர் மிகவும் வித்தியாசமானவர். அதே வேளையில் தனித்துவமானவரும் கூட" என சிராஜ் நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.

பிரம்மாண்ட தேரை கீழே தள்ளிவிட்டு தாங்கிப் பிடிக்கும் கிராம மக்கள்.. 100 வருஷமா நடக்கும் வினோத திருவிழா..!

CRICKET, MOHAMMED SIRAJ, VIRAT KOHLI, இளம் வீரர், சிராஜ், கோலி

மற்ற செய்திகள்