VIDEO: ‘என்ன தல இப்படி இறங்கிட்டீங்க’.. இதுக்கு பின்னாடி இருக்கும் ‘காரணம்’ இதுதான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டவலை இடிப்பில் சுற்றுக் கொண்டு நின்ற முகமது ஷமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில், இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 217 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணி வலுவான நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள், நியூஸிலாந்து வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்தனர்.
குறிப்பாக முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனால் 249 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பவுண்டரி லைனில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது தன் உடம்பில் டவலை சுற்றுக்கொண்டு நின்றார்.
— pant shirt fc (@pant_fc) June 22, 2021
தற்போது சவுத்தாம்ப்டனின் தட்பவெட்ப நிலை மிகவும் குளிராக உள்ளது. அதனால், உடல் சூட்டினை சமமாக வைத்துக்கொள்ள முகமது ஷமி டவலை உடம்பில் சுற்றுக் கொண்டு நின்றுள்ளார். மற்ற வீரர்கள் அனைவரும் ஸ்வெட்டர் அணிந்துள்ளனர். ஆனால் பந்துவீச்சாளர்கள் வெறும் ஜெர்சியுடன் இருப்பதால் முகமது ஷமி இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்