Karnan usa

'அப்பா இறந்தப்போ...' 'என் ரூமுக்கு வந்து ஆறுதல் சொல்லக்கூட யாரும் வர முடியாத நிலைமை...' - தந்தையை நினைத்து உருகும் இந்திய வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் தன்னுடைய தந்தை இறந்த நேரத்தில் இருந்த மனநிலை குறித்து ஆர்சிபி இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

'அப்பா இறந்தப்போ...' 'என் ரூமுக்கு வந்து ஆறுதல் சொல்லக்கூட யாரும் வர முடியாத நிலைமை...' - தந்தையை நினைத்து உருகும் இந்திய வீரர்...!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் முகமது சிராஜ், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற போட்டியில் உலகறியும் வீரராக மாறினார். 2021ஆம் ஆண்டின் 14-வது ஐபிஎல் டி20 தொடர் நாளை சென்னையில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டின் டி20 தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக அவரின் பந்துவீச்சுதான் அவரை யார் என்பதை வெளி உலகிறக்கு அடையாளப்படுத்தியது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பெற்று உலகறியும் வீரராக மாறினார்.

இந்த ஆஸ்திரேலியா பயண தொடரில் தான் சிராஜ் அவர்களின் கிரிக்கெட் கனவிற்கு உறுதுணையாக இருந்த அவரின் தந்தை காலமானார். இந்த இக்கட்டான சமயத்தில் தன்னுடைய மனநிலை இருந்த இருப்பை குறித்து ஆர்சிபி அணியின் இணையதளத்துக்கு முகமது சிராஜ் பேட்டி அளித்துள்ளார்.

அதில், 'நான் இந்தியஅணியில் டெஸ்ட் போட்டி மட்டுமல்ல, டி20, ஒருநாள் ஆகிய 3 பிரிவுகளிலும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.

இந்தியாவுக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக மாற வேண்டும் என்பதே என்னுடைய கனவு. நான் மூத்த வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா போன்று விளையாடி விக்கெட்டுகளை எடுக்க விரும்புகிறேன்.

பந்து வீச்சின் போது பும்ரா எனக்குப் பக்கத்தில் நின்று லைன் லென்திதல் பந்துவீசு, பெரிதாக ஏதும் முயற்சிக்காதே என அறிவுரை கூறுவார். என்னுடைய நாயகனான, 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய இசாந்த் சர்மாவுடன் நான் விளையாடி அவருடன் ஓய்வறையை பகிர்ந்துள்ளேன்.

கடந்த முறை நான் ஆர்சிபி அணியில் இணைந்த போது என்னுடைய நம்பிக்கை குறைந்த அளவில்தான் இருந்தது. ஆனால், முதல் விக்கெட் எடுத்தபின் நம்பிக்கை அதிகரித்தது. என்னுடைய ஆவேசமான பந்துவீச்சு தொடர வேண்டும் என அணியின் பந்துவீச்சாளர் சஞ்சய் பங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டின் ஆஸ்திரேலியத் தொடர் இனிமையாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பாக அமைந்தது.

அப்போது தான் என் ஆஸ்தான வாழ்க்கை குரு என்னை விட்டு மறைந்தார். அப்போது நான் தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தேன். என் தந்தை உயிரிழந்த செய்தியைக் கூறுவதற்கும், ஆறுதல் கூற கூட யாரும் என் அறைக்கு வரமுடியவில்லை.

தனிமைக்காலம் முடிந்து பயிற்சிக்கு வந்தபோதுதான் அனைவரும் எனக்கு ஆறுதல் தெரிவித்தனர். அந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னுடைய மனைவி, தாயார் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார்கள்.

Mohammad Siraj mood at the time of his father's death.

இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் கனவு, நான் முதல் முறை இந்தியாவிற்கு விளையாடுவதை அவர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் என்னை கிரௌண்ட்டீல் பார்க்கவிட்டாலும், என் தந்தையின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்' என மனம் நிறைந்து கூறினார்.

மற்ற செய்திகள்