"அவர விட என் 12 வயசு 'பையனுக்கு' கிரிக்கெட் 'நல்லா' தெரியும்..." முன்னாள் வீரரை சீண்டித் தள்ளிய பாகிஸ்தான் 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான முகமது ஹஃபீஸ், முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா குறித்து தெரிவித்துள்ள கருத்து ஒன்று தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அவர விட என் 12 வயசு 'பையனுக்கு' கிரிக்கெட் 'நல்லா' தெரியும்..." முன்னாள் வீரரை சீண்டித் தள்ளிய பாகிஸ்தான் 'வீரர்'!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 37,38 வயதுள்ள வீரர்களுக்கு ஏன் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதிலாக பல திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என கேள்வி எழுப்பியிருந்தார்.

பாகிஸ்தானின் தற்போதைய அணியில் ரமீஸ் ராஜா குறிப்பிட்டு சொன்ன வயதுக்கு ஒத்து இருப்பவர்கள் முகமது ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் தான். இதனால், ஹபீஸ் மற்றும் மாலிக் ஆகியோரை வேண்டுமென்றே குறிப்பிட்டு கூறியதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகமது ஹபீஸ் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 'ஒரு வீரராக ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு செய்ததை நான் எந்தவித ஆட்சேபனையும் இன்றி ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அவர் கிரிக்கெட் தொடர்பாக கூறிய கருத்தை நான் ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டேன். ரமீஸ் ராஜாவிடம் உள்ள கிரிக்கெட் விழிப்புணர்வை விட எனது 12 வயது மகனிடம் சிறந்த முறையில் கிரிக்கெட் உணர்வு உள்ளது.

இப்படி பேசி தன்னுடைய யூ டியூப் சேனலை அவர் தொடர்ந்து விளம்பரப்படுத்த எண்ணினால், நானும் அதுவரை தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடி கொண்டு தான் இருப்பேன். எனது உடல் ஃபிட்டாக இருக்கும் வரையிலும், என்னால் எதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதுவரை நான் ஆடுவேன்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்