"எனக்காக இத மட்டும் பண்ணிடுங்க.." 'மொயின் அலி' வைத்த 'கோரிக்கை'.. உடனடியாக 'ஆக்ஷன்' எடுத்த 'சிஎஸ்கே'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் நெருங்கி வரும் வேளையில், ரசிகர்கள் அனைவரும் இந்த டி 20 தொடருக்காக எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஐபிஎல் சீசனுக்கான ஏலம், சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ஒரே ஒரு வெளிநாட்டு வீரரை எடுக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், அந்த அணி இங்கிலாந்து வீரர் மொயின் அலியை (Moeen Ali) ஏலத்தில் எடுத்திருந்தது.
தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ளதால், மொயின் அலி சென்னை அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, முஸ்லீம் மத்ததைச் சேர்ந்த மொயின் அலி, மதத்தின் பெயரில் உள்ள நம்பிக்கையின் காரணமாக, மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கத்தை எதிர்க்கும் குணமுடையவர்.
இங்கிலாந்து அணியாக இருந்தாலும், வேறு ஏதேனும் ஐபிஎல் போன்ற தொடர்களில் ஆனாலும், தான் அணியும் ஜெர்சியில், ஏதேனும் மதுபான பிராண்ட்களின் லோகோக்கள் இடம்பெறுவதை மொயின் அலி ஆதரிக்க மாட்டார். இதனையடுத்து, சிஎஸ்கேவின் ஜெர்சியில், 'SNJ 10000' என்ற மதுபான பிராண்டின் லோகோ இடம்பெற்றுள்ளது.
இதனால், தான் அணியவுள்ள சிஎஸ்கே ஜெர்சியில், குறிப்பிட்ட லோகோவை மாற்ற வேண்டும் என மொயின் அலி, சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கு, சிஎஸ்கே நிர்வாகமும் சம்மதம் தெரிவித்து, அவரது ஜெர்சியில், குறிப்பிட்ட லோகோவை மாற்றிக் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த தகவலில் முற்றிலும் உண்மையில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், மொயின் அலி அப்படி எந்த கோரிக்கையையும் முன் வைக்கவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் தகவலில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்