"இப்டி கூட ஒரு ஷாட் அடிக்க Try பண்லாம் போலயே".. ஊருக்கே க்ளாஸ் எடுத்த CSK வீரர்.. வைரல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் ஒரு நாள் தொடரை ஆடுவதாக தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

"இப்டி கூட ஒரு ஷாட் அடிக்க Try பண்லாம் போலயே".. ஊருக்கே க்ளாஸ் எடுத்த CSK வீரர்.. வைரல் வீடியோ!!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "கர்ப்பமான ஆண்?".. இந்தியாவில் முதல் முறை..! கவனம் ஈர்த்த மூன்றாம் பாலின தம்பதி!!

இந்த தொடரில், முதல் இரண்டு போட்டிகளையும் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து, நடந்த 3 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சமீபத்தில் மோதி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 131 ரன்களும், டேவிட் மலான் 118 ரன்களும் எடுத்திருந்தனர்.

Moeen Ali new cricket shot to the world in odi match

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில், அதிகபட்சமாக ஹென்ரிச் 80 ரன்கள் எடுத்தார். மறுபக்கம் இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். ஒரு நாள் தொடரை இழந்தாலும் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Moeen Ali new cricket shot to the world in odi match

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி அடிக்க முயன்ற ஷாட் தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது, அந்த அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்திருந்தார்.

Moeen Ali new cricket shot to the world in odi match

Images are subject to © copyright to their respective owners.

மொயீன் அலி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி வீசிய பந்தை எதிர்கொண்டார். அப்போது ரிவர்ஸ் ஹிட் அடிக்க முயன்றதுடன் மட்டுமில்லாமல், ஒற்றைக்கையில் பேட்டை வேகமாக வீசவும் செய்தார் மொயீன் அலி. பந்து பேட்டில் படவில்லை என்றாலும் அவர் முயற்சித்த ஷாட் குறித்த வீடியோ தான் கிரிக்கெட் ரசிகர்களை வியந்து பார்க்க வைத்துள்ளது. மொயீன் அலி ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "அசிம் ஒண்ணும் Tough Competitor இல்ல, விக்ரமன் தான்".. ஷிவின் நாமினேட் செஞ்சதுக்கு பின்னாடி இப்டி ஒரு விஷயம் இருக்கா?

CRICKET, MOEEN ALI, MOEEN ALI NEW CRICKET SHOT, ODI MATCH

மற்ற செய்திகள்