"இந்த விஷயத்துல 'சிஎஸ்கே' தான் டாப்பு.. " வியந்து போன 'மொயின் அலி'.. அதுலயும் 'தோனி' பத்தி சொன்னது தான் 'ஹைலைட்டே'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க போவதால், அனைத்து கிரிக்கெட் வீரர்களும், தங்களது அணியுடன் இணைந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது மும்பையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்துடன் வெளியேறியது. இதனால், இந்த முறை சிறப்பாக ஆடி, கோப்பையை கைப்பற்றி, மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்கும் முனைப்புடன் உள்ளது.
மேலும், கடந்த ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை அணியில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா, இந்தாண்டு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அதே போல, மொயின் அலி, புஜாரா, கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்நிலையில், சிஎஸ்கே அணியில் இணைந்தது பற்றி பேசிய இங்கிலாந்து வீரர் மொயின் அலி (Moeen Ali), 'நான் தோனியின் கீழ் ஆடிய வீரர்களிடம் பேசிய போது, அவர்கள் எவ்வாறு தங்களது ஆட்டத்தை, தோனியின் உதவியுடன் மெருகேற்றினர் என்பது தெரிய வந்தது. ஒவ்வொரு வீரருக்குள்ளும், தன்னம்பிக்கை மற்றும் திறமையை தோனி வளர்ப்பதைக் கண்டு நான் ஆச்சரியமடைகிறேன்.
எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும், தோனியின் தலைமையின் கீழ் ஆட வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதனை நினைத்து நான் வியக்கிறேன். அதே போல, மற்ற அணிகளில் இருந்து சென்னை அணி, அதன் கட்டமைப்பில் தான் மாறுபடுகிறது.
எந்தவித அழுத்தமும் இல்லாமல், வீரர்களை மிக பொறுமையாக கையாளுகிறது. வீரர்களுக்கு அழுத்தம் தராமல் இருக்கும் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் மிக முக்கியம். அந்த விஷயத்தில், நான் சென்னையில் உள்ளதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்' என தோனி மஃற்றும் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தை பாராட்டிப் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்