டி20 -லயே இப்படி நடந்துச்சா.?.. சூர்யகுமாருக்கே சுத்து காட்டிய நியூசிலாந்து கேப்டன்.. !!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, ராஞ்சியில் வைத்து நேற்று (27.01.2023) நடைபெற்றிருந்தது.

டி20 -லயே இப்படி நடந்துச்சா.?.. சூர்யகுமாருக்கே சுத்து காட்டிய நியூசிலாந்து கேப்டன்.. !!

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 அவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கி இருந்த டெவான் கான்வே 52 ரன்களும், டேரில் மிட்செல் 59 ரன்களும் எடுத்திருந்தனர். அதிலும் அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 27 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்திருந்தனர். சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் உதவியால் ஓரளவுக்கு சிறந்த ஸ்கோரை இந்திய அணி எட்டினாலும், வெற்றி இலக்கை தொட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது.

இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக ஒரு நாள் தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்ததையடுத்து தற்போது டி 20 தொடரை நியூசிலாந்து அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

Mitchell Santner maiden over against Suryakumar Yadav in T20

நியூசிலாந்து அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர் அதிலும் குறிப்பாக கேப்டன் மிட்செல் சாண்டனர் 4 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

இந்நிலையில், இந்த போட்டியில் சூர்யகுமாரை வைத்து மிட்செல் சாண்டனர் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் டி20 போட்டியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் சூர்யகுமார் யாதவ். Mr. 360 என அழைக்கப்படும் சூர்யகுமார், மைதானத்தின் எந்த பகுதிகளிலும் பந்தை திருப்பி பவுண்டரிகளாக மாற்றக்கூடிய திறமை படைத்தவர். அதேபோல டி20 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ள சூர்யகுமார் யாதவ், டி 20 போட்டியின் சர்வதேச பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளார்.

Mitchell Santner maiden over against Suryakumar Yadav in T20

அப்படி ஒரு சூழலில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டி 20 போட்டியில் 34 பந்துகளில் ஆறு ஃபோர்கள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார் சூர்யகுமார். அப்போது அவர் பேட்டிங் செய்த சமயத்தில், இரண்டாவது இன்னிங்சின் ஆறாவது ஓவரை நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்டனர் வீசி இருந்தார். பவர் பிளே ஓவர் என்ற சூழலில், சூர்யகுமார் பேட்டிங் பக்கம் இருந்தபோதும் அவரை வைத்து அந்த ஓவரையும் மெய்டனாக மாற்றி இருந்தார் சாண்டனர். சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு வீரரை வைத்து, டி20 போட்டியில் மெய்டன் ஓவரை, அதுவும் பவர் பிளேயில் வீசி உள்ள மிட்செல் சாண்டனரை பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

SURYAKUMR YADAV, MITCHELL SANTNER, IND VS NZ

மற்ற செய்திகள்