"என்ன 'நெனப்பு'ல இப்படி எல்லாம் பேசுறீங்க??." 'மும்பை' அணி மீதுள்ள கடுப்பில் ரசிகர் சொன்ன 'வார்த்தை'.. நிதானத்தை இழந்து கொதித்த கிரிக்கெட் 'வீரர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகள் ஆடியுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் கண்டுள்ளது.

"என்ன 'நெனப்பு'ல இப்படி எல்லாம் பேசுறீங்க??." 'மும்பை' அணி மீதுள்ள கடுப்பில் ரசிகர் சொன்ன 'வார்த்தை'.. நிதானத்தை இழந்து கொதித்த கிரிக்கெட் 'வீரர்'!!

மும்பை அணி தங்களது முதல் 5 போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடி வரும் நிலையில், அந்த அணி பேட்டிங்கில் சற்று சொதப்பலாகவே ஆடி வருகிறது. பந்து வீச்சில் வலிமையுடன் இருப்பதால், 2 வெற்றிகளை அந்த அணி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தின் காரணமாக, இந்த சூழல் இருக்கலாம் என கருதப்படும் நிலையில், புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 4 ஆவது இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் பெங்களூர் அணியும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் முறையே உள்ளது. இந்நிலையில், கடந்த சீசனில் மும்பை அணிக்காக ஆடிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனகன் (Mitchell McClenaghan), தனது ட்விட்டர் பக்கத்தில், 'புள்ளிப் பட்டியலில், முதலில் 4 இடங்களில் இருக்கும் அணிகளில் ஏதேனும் மாற்றங்கள் நிகழும் என நீங்கள் நினைக்கிறீர்களா?' என ட்வீட் செய்திருந்தார்.

 

மெக்லாகன் பதிவிற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், 'நான்காம் இடத்தில் இருக்கும் மும்பை அணி, லீக் தொடரின் இறுதியில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடிக்கும்' என கமெண்ட் செய்தார். ரசிகரின் இந்த பதிவைக் கண்ட முன்னாள் மும்பை வீரரான மெக்லெனகன், சற்று நிதானத்தை இழந்தார். 'நீங்கள் என்ன முட்டாளா?' என ரசிகரின் கருத்திற்கு பதில் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து, மற்றொரு ரசிகர் ஒருவர், 'உண்மைகள் சில நேரங்களில் வலிக்கும்' என மும்பை அணி கடைசி இடம் தான் பிடிக்கும் என்பதற்கு ஆதரவாக மீண்டும் கருத்து தெரிவித்தார்.

இதனால், மீண்டும் கடுப்பான மெக்லாகன், 'மீண்டும் எப்படி இப்படி சொல்கிறீர்கள்?. அப்படி நீங்கள் கூறுவது போல மும்பை அணி கடைசி இடத்தைப் பிடித்தால், என்னிடம் உள்ள கிரிக்கெட் கிட் அத்தனையும் தொண்டு நிறுவனத்திற்காக நான் ஏலம் விடுகிறேன்' என சவால் விடுத்துள்ளார்.

 

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை அணி, இந்த சீசனில் கடைசி இடம் தான் பெறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், முன்னாள் மும்பை வீரர் ஒருவர், தனது முன்னாள் அணி மீதான நம்பிக்கையில், இப்படி சவால் விட்டுள்ள ட்வீட் ஒன்று, சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்