'நாலாவதா' அவரை எறங்க சொன்னேன்...ஆனா 'இவரு' வந்துட்டாரு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடந்த 3-வது டி20 போட்டியில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.முன்னதாக முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.இதனால் இந்த தொடரில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.

'நாலாவதா' அவரை எறங்க சொன்னேன்...ஆனா 'இவரு' வந்துட்டாரு!

இந்த நிலையில் பண்ட்-ஷ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் இடையில் 4-வதாக இறங்குவதில் குழப்பம் ஏற்பட்டதாக கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,''10 ஓவர்களுக்கு பிறகு, ரிஷப் களமிறங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.ஆனால் அதற்கு முன்பாக ஷ்ரேயாஸ் களத்துக்கு வந்துவிட்டார். தகவல் தொடர்பு பிரச்சினையால் தான் இப்படி நடந்ததாக பிறகு கேள்விப்பட்டேன்.

உலக கோப்பை டி20 போட்டியை மனதில் வைத்துத்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தோம்.ஆனால் அது பலனளிக்கவில்லை,''என தெரிவித்துள்ளார்.சேஸிங்குக்கு சாதகமான பெங்களூர் மைதானத்தில் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது, ரசிகர்கள்-விமர்சகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.