"எனக்குன்னு ஒரு ஸ்கூட்டி வாங்கணும்".. பழங்குடி பெண் TO கிரிக்கெட் ஸ்டார்.. WPL ஏலத்தில் கவனம் ஈர்த்த மின்னுமணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. இதனால் பெருமகிழ்ச்சியில் உள்ளார் அவர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "சாப்பாடு தரமா இருக்கணும்".. அரசு பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
இந்தியாவில் ஆடவர்களுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, இந்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளும் நடைபெற உள்ளது. ஆடவர் ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் அணிகளை எடுத்துள்ளது. குஜார்ட் ஜெய்ன்ட்ஸ், UP வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மகளிருக்கான ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது.
முன்னதாக, கடந்த சில தினங்கள் முன்பு இந்த 20 லீக் தொடருக்கான ஏலமும் நடைபெற்றிருந்தது. மகளிருக்கான முதல் பிரீமியர் லீக் தொடர் என்பதால் ஏலத்தின் போதே கடும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேரளாவை சேர்ந்த மின்னு மணி எனும் வீராங்கனையை 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
கேரளாவின் வயநாடு பகுதியை சேர்ந்தவர் மின்னு மணி. இவருடைய தந்தை சிகே மணி தினக்கூலியாக பணிசெய்து வருகிறார். சாதாரண பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த மின்னு மணிக்கு கனவுகள் பெரியதாக இருந்தன. கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு எப்படியாவது இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. அதுவே கொஞ்ச காலத்தில் லட்சியமாகவும் மாறிப்போனது. இந்த நெடும் பயணத்தில் தற்போது அவருக்கு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
தென் மண்டல அணிக்காக விளையாடி வரும் மின்னு மணி ஆல்ரவுண்டர் ஆவார். கேரள அணியில் அங்கம் வகிக்கும் இவர் சேலஞ்சர் டிராபியிலும் விளையாடி உள்ளார். இந்த நிலையில் WPL ஏலத்தில் 30 லட்ச ரூபாய்க்கு டெல்லி கேபிட்டஸ்ல் அணி இவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது. சிறுவயதில் பல இடங்களில் கடன் வாங்கி மின்னு மணியை பயிற்சிக்கு அனுப்பி இருக்கிறார் அவருடைய தந்தை மணி.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"WPL ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படுவது மிகப்பெரிய கவுரவம். என்னுடைய மகிழ்ச்சியை விவரிக்க என்னிடத்தில் வார்த்தைகளே இல்லை. இவ்வளவு பெரிய தொகையை நான் பார்த்தது கூட கிடையாது. இந்த பணத்தை கொண்டு எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்க வேண்டும் என நினைக்கிறேன். அதன்மூலம் நான் 4 பேருந்துகளை பிடித்து பயிற்சிக்கு சொல்லவேண்டியது இருக்காது. கூடுதல் நேரத்தை பயிற்சியில் செலவிட முடியும்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.
கேரளாவை சேர்ந்த பழங்குடி பெண்ணான மின்னு மணி மகளிர் பிரிமியர் லீக்கில் விளையாட இருப்பது அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
Also Read | காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதலர்கள்.. சோகத்தில் முடிந்த காதல் பயணம்.. கலங்கிப்போன குடும்பத்தினர்..!
மற்ற செய்திகள்