"அவரு மட்டும் 'அவுட்' ஆனா போதும்.. அதுக்கப்பறம் என் பையன் 'கிரிக்கெட்' பாக்கமாட்டான்..." இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய 'மைக்கேல் வாகன்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், இந்திய அணி மீதும் கேப்டன் விராட் கோலி மீதும் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலியைப் பாராட்டி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 'எனது குழந்தை ஒரு குட்டி கிரிக்கெட் வீரர். விராட் கோலி பேட்டிங் செய்ய வரும் போது எல்லாம் நான் தூங்கி விட்டால் என்னை எழுப்புங்கள் என கூறுவான். கோலி ஆட்டமிழந்து திரும்பினால் அவன் தனது அறைக்கு சென்று வேறு வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவான். அதன் பிறகு அவன் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில்லை. அந்தளவுக்கு கோலியின் பேட்டிங் குழந்தைகளிடையே ஒரு தாக்கத்தை உருவாகியுள்ளது.
விராட் கோலி குறித்து நான் கவலைப்படாத ஒரு விஷயம் என்றால் அது அவரது பேட்டிங் தான். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் சிறந்த வீரர். அதுகுறித்து எந்த சந்தேகமும் இல்லை. அவர் இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது தான் கவலையாக உள்ளது. அவர் இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியும் என எனக்கு தோன்றவில்லை. அந்த டெஸ்ட் அணிக்கு அவர் அவ்வளவு முக்கியம். கோலி ஒரு சதமடித்தால் போதும். அதன் பிறகு தொடர்ச்சியாக 4,5 சதங்களை அவரால் அடிக்க முடியும்' என வாகன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்