சும்மா 'டைம் பாஸ்' பண்றதுக்காக ஏதாவது சொல்லுவாரு...' 'வாகனை சீண்டிய முன்னாள் வீரர்...' ஹலோ 'அந்த விஷயத்துல' சிக்கியது நியாபகம் இருக்கா...? - பதிலுக்கு பொளந்து கட்டிய வாகன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கேப்டனுக்கு துணை நிற்க போய் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், ஆஸ்திரேலியாவின் வாகனிடம் வாங்கிகட்டி கொண்டுள்ளார்.
வரும் ஜூன்18ம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆகியோர்க்கு இடையே யார் தலை சிறந்த வீரர் என்ற வாக்குவாதம் இணையத்தில் நிகழ்ந்து வருகிறது.
இந்த விவாதம் குறித்து மைக்கேல் வாகன் நியூசிலாந்து பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துதான் தற்போது பூதாகரமாகியுள்ளது.
அவர் கூறியுள்ளாதாவது, 'சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்கள் மற்றும் அதிக லைக்குகள் பெறுபவர் விராட். அதனாலேயே விராட் கோலி, கேன் வில்லியம்சனுக்கு சமமானவர் என்று பார்க்க முடியாது. அதோடு வில்லியம்சனுக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை என்றாலும் அவர் தகுது இல்லாதவர் இல்லை. வில்லியம்சன் தான் இந்த போட்டியில் அதிக ரன்கள் அடிப்பார்' என தெரிவித்துள்ளார் வாகன்.
வாகனின் இந்த கருத்து பலரை சூடாக்கியது. அதோடு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான சல்மான் பட், விராட் கோலி திறமையால் தான் சிறந்த வீரராக உள்ளார் என தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதோடு மட்டும் இல்லாமல், 'கோலி சர்வதேச போட்டிகளில் அவர் 70 சதங்கள் அடித்துள்ளார். கோலியை பற்றி வாகன் ஒப்பிடுவது சரியானதாக இல்லை பயனற்ற ஒன்று என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஓப்பனராக களமிறங்கும் அவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. வாகனின் இந்த பேட்டி சும்மா நேரம் போவதற்காக கொடுத்துள்ளார் என நினைக்கிறேன்' என காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த வாகனோ பதிலுக்கு, தன் ட்விட்டர் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'சல்மான் என்னை பற்றி பேசி, கருத்து தெரிவிப்பதற்கு அவரின் உரிமை. ஆனால் கடந்த 2010ம் ஆண்டு அவர் மேட்ச் ஃபிக்ஸிங் முறைகேடு செய்து சிக்கியதை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பார் என நினைக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்