"'கோலி' எல்லாம் அதுல 'பெஸ்ட்' கெடையாது..." சும்மா இருக்காம 'ட்வீட்' போட்டு சீண்டிய மைக்கேல் 'வாகன்'... 'ரவுண்டு' கட்டிய 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.

"'கோலி' எல்லாம் அதுல 'பெஸ்ட்' கெடையாது..." சும்மா இருக்காம 'ட்வீட்' போட்டு சீண்டிய மைக்கேல் 'வாகன்'... 'ரவுண்டு' கட்டிய 'ரசிகர்கள்'!!

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 578 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அதிகபட்சமாக 218 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு முன்னர், இங்கிலாந்து அணி, இலங்கை அணிக்கு எதிராக ஆடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஜோ ரூட் சதமடித்து அசத்திரியிருந்தார். இதில் ஒரு போட்டியில் இரட்டை சதமும் அவர் அடித்திருந்தார்.

இந்திய டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து அணி சமாளிக்க முடியாது என்ற ஒரு கருத்து பரவலாக இருந்தது. ஆனால், எதிர்மாறாக இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை திறம்பட கையாண்டது.

 

இதனிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் செய்துள்ள ட்வீட் ஒன்று, ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் கோலியை விட, ஜோ ரூட் தான் சிறந்த வீரர் என தெரிவித்துள்ளார். இருவரின் சுழற்பந்து வீச்சு விவரங்களையும் தனது டீவீட்டில் குறிப்பிட்டு வாகன் அப்படி கூறியுள்ளார்.

வாகனின் இந்த ஒப்பீடு, இந்திய ரசிகர்களிடையே அதிகமாக கோபமடையச் செய்துள்ளது. அவரது டீவீட்டை பகிர்ந்து, பலவித விமர்சனக் கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

ஆஸ்திரேலியா தொடருக்காக இந்திய அணி சென்றிருந்த போது, டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா தான் வெல்லும் என்றும், இந்திய அணி ஒரு போட்டியை வெல்வது கூட கடினம் தான் என வாகன் ட்வீட் செய்திருந்தார்.

 

ஆனால், ஒட்டு மொத்த விமர்சனங்களையும் இந்திய அணி மாற்றி எழுதி, வரலாறு படைத்திருந்தது. இந்திய அணியின் வெற்றியால் வாகனை ரசிகர்கள் அதிகம் கிண்டல் செய்திருந்தனர். தற்போதும், அதே போல ட்வீட் ஒன்று செய்து, ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் மைக்கேல் வாகன்.

மற்ற செய்திகள்