‘நம்மள வம்பிழுக்கிறதே வாகனுக்கு வேலையா போச்சு’!.. இப்போ என்ன சொல்லிருக்காரு பாருங்க.. கடும் கோபத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் முதல்முறையாக அந்த அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த போட்டி ஆரம்பிக்கும் முன், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதில் பலரும் நியூஸிலாந்து அணி வெற்றி பெறும் என்று கூறியிருந்தனர். அதற்கு காரணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன் நியூஸிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியும் பெற்றிருந்தது.
இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் இருப்பதால் நியூஸிலாந்து கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் கூறியிருந்தனர். அதேபோல் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகனும், நியூஸிலாந்து அணி வெற்றி பெறும் என்றும், கேப்டன் கேன் வில்லியம்சன் நட்சத்திர வீரராக திகழ்வார் என்றும் கூறியிருந்தார்.
மேலும், இப்போட்டியின்போது அடிக்கடி மழை குறுக்கிட்டது. அப்போது நியூஸிலாந்து அணியிடம் இருந்து மழைதான் இந்தியாவை காப்பாற்றி வருகிறது என கிண்டல் செய்யும் விதமாக மைக்கேல் வாகன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்காக இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி பதிவிட்டிருந்தனர். ஆனால், தற்போது மைக்கேல் வாகன் கணித்ததுபோல நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
I think I may need a few apologies from the thousands of Indian fans in a few hours for my awful prediction that NZ would win the Test championship final … #OnOn #TestChampionshipFinal
— Michael Vaughan (@MichaelVaughan) June 23, 2021
இந்த நிலையில் ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘நான் கணித்தது போலவே நியூஸிலாந்து வெற்றி பெற்றுவிட்டது. இன்னும் சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்களிடம் இருந்து நான் மன்னிப்பை எதிர்பார்க்கிறேன்’ என கிண்டல் செய்யும் விதமாக மைக்கேல் வாகன் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த இந்திய ரசிகர்கள் மைக்கேல் வாகனை கடுமையாக திட்டி பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்