"இந்த உலகமே பைத்தியமாயிடுச்சு"... கடுப்பாகி 'முன்னாள்' வீரர் போட்ட 'ட்வீட்'!!... பரபரப்பை உண்டு பண்ணிய 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களை வெற்றிகரமாக முடித்து விட்டு இந்திய அணி சொந்த மண்ணிற்கு திரும்பியுள்ள நிலையில், அடுத்ததாக இங்கிலாந்து அணியை இந்தியாவில் வைத்தே சந்திக்கவுள்ளது.
இதில், முதலாவதாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதன்பிறகு ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் ஜானி பைர்ஸ்டோவ் இடம்பெறாமல் போனது மிகப்பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து மட்டுமில்லாது வெளியேயுள்ள நாடுகளில் மிகச் சிறப்பாக ஆடும் பைர்ஸ்டோவை ஏன் அணியில் எடுக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து, முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன், பைர்ஸ்டோவை அணியில் எடுக்காதது குறித்து ட்விட்டரில் பரபரப்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 'இங்கிலாந்து அணியின் முதல் 3 பேட்ஸ்மேன்களில் துணை கண்டங்களின் தன்மையை அறிந்து, எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஆடக் கூடிய வீரருக்கு முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் சொந்த மண்ணில், உலகின் சிறந்த அணியான இந்தியாவுக்கு எதிராக. உலகமே பைத்தியமாகி விட்டது' என குறிப்பிட்டுள்ளார்.
The only player in England’s Top 3 that’s playing the sub continent conditions with any control or calmness is resting for the first 2 Tests against the best Team in world at home #India !!! The world is officially mad ... #SLvENG
— Michael Vaughan (@MichaelVaughan) January 23, 2021
இந்திய மண்ணில் இதுவரை ஆறு டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள பைர்ஸ்டோவ், 40.11 சராசரியுடன் 361 ரன்கள் எடுத்துள்ள நிலையில், பைர்ஸ்டோவ் சுழற்பந்து வீச்சையும் திறம்பட எதிர்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்