'அவங்க ரெண்டு பேரும் டீம்ல இருந்தா...' 'கண்டிப்பா இந்தியா டி20 வேர்ல்டு கப் ஜெயிச்சிடும்...' - மைக்கேல் வாகன் சொல்ற அந்த 2 பேரு யாரு தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல இரு முக்கியமான வீரர்கள் தேவை என ட்வீட் செய்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்.

'அவங்க ரெண்டு பேரும் டீம்ல இருந்தா...' 'கண்டிப்பா இந்தியா டி20 வேர்ல்டு கப் ஜெயிச்சிடும்...' - மைக்கேல் வாகன் சொல்ற அந்த 2 பேரு யாரு தெரியுமா...?

கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்தியா 3- 2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

டி20 தொடரில் கடைசி நாளான நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி இருந்தனர்.

224 ரன்களில் விராட் கோலி  80 ரன்கள், ரோகித் சர்மா 64 ரன்கள் ஹர்திக் பாண்டியா 39 ரன்கள்  மற்றும் சூரியகுமார் 32 ரன்கள் குவித்து அதிக ரன்களுக்கு வழிவகுத்தனர்.

20 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆட்ட இறுதியில் 8 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் பட்லர் மற்றும் மாலன் பார்ட்னர்சிப்பை தவிர அனைவரும் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணியை துக்கத்தில் தள்ளினர்.

போலிங் செய்த இந்திய அணியில், சர்துல் தாகூர் 3, புவனேஷ்வர்குமார் 2, ஹர்திக் பாண்டியா & நடராஜன் தலா 1 விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர். இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-2 என  டி20 தொடரை கைப்பற்றியிருக்கிறது.

தற்போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியின் வெற்றி குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

                                  

அதில், 'இந்திய அணி இங்கிலாந்திருக்கேதிரான இந்த டி20 தொடரை மிக அற்புதமாக கையாண்டு வெற்றியை தழுவியுள்ளது. இரு அணி பங்கேற்கும் தொடரில் அநேரத்தில் யார் அபாரமாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு. அதன்படி தற்போது இந்தியா வென்றுள்ளது.

                                     

அதுமட்டுமில்லாமல் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜாவை சேர்க்க வேண்டும். இவர்கள் இருவரும் டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கியமானவர்கள். அப்படி இவர்கள் சேர்க்கப்பட்டால் பார்க்க சிறந்த தொடராக இருக்கும்' எனக் கூறிப்பிட்டுள்ளார்.

                                  

இந்திய அணியை பாராட்டியது மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜாவை உலக கோப்பைக்கு சிபாரிசு செய்த சம்பவம் கிரிக்கெட் உலகத்திலும், கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

மற்ற செய்திகள்