‘அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க’!.. முதல்ல ‘பிசிசிஐ’ இதை செய்யுமா..? கோலி சொன்ன கருத்தை ‘கடுமையாக’ விமர்சித்த வாகன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து விராட் கோலி கூறிய கருத்தை மைக்கேல் வாகன் விமர்சனம் செய்துள்ளார்.

‘அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க’!.. முதல்ல ‘பிசிசிஐ’ இதை செய்யுமா..? கோலி சொன்ன கருத்தை ‘கடுமையாக’ விமர்சித்த வாகன்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பேட்டிங்கில் சொதப்பியது. அதில் ரோஹித் ஷர்மா, புஜாரா, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். முக்கியமான போட்டியில் சீனியர் வீரர்களின் இத்தகைய ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

Michael Vaughan dismisses Kohli's idea of best-of-three finals in WTC

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய விராட் கோலி ஐசிசி மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். அதில், ‘உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியை ஒரே ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது ஒரு டெஸ்ட் தொடர் என்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

Michael Vaughan dismisses Kohli's idea of best-of-three finals in WTC

எந்தவொரு அணியால் ஆரம்பத்தில் இருந்து மற்ற அணியை வீழ்த்த முடிகிறதோ அல்லது எந்த அணியால் மீண்டு எழுந்து வர முடிகிறதோ, அதுதான் வெற்றியாளரை தீர்மானிக்கும். வெறும் 2 நாட்களில் அழுத்தம் நிறைந்த போட்டியில் வெற்றி பெற்று காட்டுவதல்ல. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை’ என விராட் கோலி காட்டமாக பேசியிருந்தார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ‘3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்துவதற்கு கால இடைவெளி எங்கு உள்ளது? ஐபிஎல் தொடரின் 2 வார போட்டிகளை பிசிசிஐ குறைக்குமா? அது சந்தேகம் தானே. இறுதிப்போட்டி என்பது ஒரே போட்டியால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டியது. அந்த ஒரு போட்டியில் வீரர்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வார்கள். அதுதான் அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றும்’ என கோலியின் கருத்தை அவர் விமர்சனம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்