‘ஓகோ இதுக்காதான் அவர் என்னை ப்ளாக் பண்ணனும்னு சொன்னாரா..!’.. மைக்கேல் வாகனை பங்கமாய் ‘கலாய்த்த’ வாசிம் ஜாபர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமூக வலைதளங்களில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபரை ப்ளாக் செய்வேன் என கூறிய மைக்கேல் வாகனுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியையும், இந்திய கிரிக்கெட் வீரர்களையும் சமூக வலைதளங்களில் அடிக்கடி விமர்ச்சித்து சர்ச்சையை கிளப்பி வருவார். இவருடைய கருத்துக்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் முதல் ஆளாக இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்.
இந்த நிலையில் தனியார் விளையாட்டு வலைதளம் ஒன்றின் ட்விட்டர் பக்கத்தில் நேரலையில் மைக்கேல் வாகன் உரையாடினார். அதில் அவரிடம், நீங்கள் உங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் எந்த கிரிக்கெட் வீரரை ப்ளாக் செய்ய விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை கேள்வி எழுப்பப்பட்டது. உடனே இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரைத்தான் ப்ளாக் செய்ய விரும்புகிறேன் என்று மைக்கேல் வாகன் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ‘உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் நான் யாரையும் ப்ளாக் செய்ய விரும்ப மாட்டேன். ஆனால் நான் கூறும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் என்னை யாராவது திட்டினால் அவர்களை உடனடியாக ப்ளாக் செய்து விடுவேன்’ என மைக்கேல் வாகன் கூறினார்.
மைக்கேல் வாஹனின் இந்த பேட்டியைக் கண்ட வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மைக்கேல் வாஹன் ஏன் என்னை ப்ளாக் செய்ய விரும்புகிறார் என்று தற்போதுதான் நானும் என் நண்பர்களும் தெரிந்து கொண்டோம்’ என பதிவிட்டு 2007-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய இந்திய அணியின் புகைப்படத்தையும் வாசிம் ஜாபர் இணைத்திருந்தார்.
Me and my friends after knowing @MichaelVaughan wants to block me😁 https://t.co/eDKct3Uc8a pic.twitter.com/Dtk5XOXt64
— Wasim Jaffer (@WasimJaffer14) May 27, 2021
கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி, மைக்கேல் வாஹன் தலைமையிலான இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் அவர்களது சொந்த மண்ணிலேயே தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. அப்போது இந்திய டெஸ்ட் அணியில் வாசிம் ஜாபரும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் தோல்வியடைந்த விரக்தியினால்தான், மைக்கேல் வாஹன் தன்னை ப்ளாக் செய்ய விரும்புகிறார் என்று அந்த பதிவில் மறைமுகமாக வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்