செம கடுப்பான MI அணியின் ஓனர்.. அப்படி என்ன நடந்தது..? வைரலாகும் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் உரிமையாளர் கோபமடைந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 70 ரன்களும், மயங்க் அகர்வால் 52 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்களிலும், இளம் வீரர்கள் இஷான் கிஷன் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் (49 ரன்கள்), திலக் வர்மா (36 ரன்கள்) ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த சூழலில் திடீரென இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 131 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மும்பை அணி பறிகொடுத்தது.
இந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பொல்லார்டு ஜோடி சேர்ந்தனர். அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது 2 ரன்கள் எடுக்க முயற்சி செய்து, தேவையில்லாமல் பொல்லார்ட்டை சூர்யகுமார் யாதவ் ரன் அவுட் செய்துவிட்டார். அதனால் மும்பை அணியின் வெற்றி பெற வேண்டிய முழுப் பொறுப்பும் சூர்யகுமாரின் மீது விழுந்தது.
இந்த நிலையில், ரபாடா வீசிய ஓவரில் ஒடியன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து சூர்யகுமார் யாதவ் (48 ரன்கள்) அவுட்டானார். இதனால் கேலரியில் அமர்ந்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கோபமடைந்தார். தற்போது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், இப்போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5-வது தோல்வியை மும்பை அணி சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்