RRR Others USA

“சொன்னா நம்பமாட்டீங்க.. அது எப்படி நடந்துச்சுன்னு இப்ப வர தெரியல”.. ‘தல’ தோனி பற்றி MI வீரர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி குறித்து மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் சுவாரஸ்ய தகவல் பகிர்ந்துள்ளார்.

“சொன்னா நம்பமாட்டீங்க.. அது எப்படி நடந்துச்சுன்னு இப்ப வர தெரியல”.. ‘தல’ தோனி பற்றி MI வீரர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 12 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி தழுவியுள்ளது. இந்த சூழலில் நாளை (06.04.2022) கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் இளம் வீரர் இஷான் கிஷன், சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் தோனி குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘விக்கெட் கீப்பிங்கை விட தோனியின் மனது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டுபிடிக்கவே அதிகமாக முயற்சி செய்கிறேன். நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரு ஐபிஎல் போட்டி என்னை மிகவும் மன அழுத்தத்திற்கு உண்டாக்கியது. ஒரு போட்டியில் நான் நன்றாக விளையாடி பவுலர்களின் பந்துவீச்சு சிதறடித்து கொண்டிருந்தேன். அப்போது தோனி மெதுவாக சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரிடம் ஏதோ கூறினார். அப்படி அவர் என்ன கூறினார் என்று என்னால் கேட்க முடியவில்லை.

MI Ishan Kishan share interesting story about CSK Ex-captain Dhoni

அப்போதிலிருந்து தோனி அப்படி என்ன சொல்லி இருப்பார் என என் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதன்பின் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. அவர் வீசிய பந்தில் ஷார்ட் டேர்ம் தேர்டு மேனிடம் கேட்ச் கொடுத்து நான் அவுட்டானேன். இப்போது வரை சுழற்பந்து வீச்சாளர் ஷார்ட் டேர்ம் தேர்டு மேனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானேன் என எனக்கு தெரியவில்லை’ என இஷான் கிஷன் கூறியுள்ளார்.

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை அணி இவரை எடுத்தது. இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிகபட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களில் இஷான் கிஷனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

CSK, MSDHONI, MUMBAI-INDIANS, ISHAN KISHAN

மற்ற செய்திகள்