VIDEO: ‘அவுட்டான கோபம்’.. பெவிலியன் திரும்பியபோது ‘ஆக்ரோஷமாக’ MI வீரர் செஞ்ச காரியம்.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டான விரக்தியில் பவுண்டரி லைனில் கோவமாக பேட்டால் அடித்து இஷான் கிஷனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘அவுட்டான கோபம்’.. பெவிலியன் திரும்பியபோது ‘ஆக்ரோஷமாக’ MI வீரர் செஞ்ச காரியம்.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அதனால் தொடக்கத்தில் இருந்தே ரன் குவித்து ஆட வேண்டும் என்ற நெருக்கடியில் வீரர்கள் விளையாடினர். ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் இளம் வீரர் இஷான் கிஷனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மொத்தம் 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 ரன்கள் எடுத்திருந்தபோது, மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய ஓவரில் போல்ட்டாகி அவுட்டானார். இதனால் கடும் கோபத்தில் வெளியேறிய இஷான் கிஷன், பெவிலியன் நோக்கி கோபமாக நடந்தார். அப்போது பவுண்டரி லைனை பேட்டால் ஓங்கி அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. பலரும் இஷான் கிஷனுக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் மும்பை தோல்வி அடைந்தது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 6-வது தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUMBAI-INDIANS, IPL, ISHANKISHAN, MIVLSG

மற்ற செய்திகள்