தொடர்ந்து 6 தோல்வி.. மேட்ச் முடிஞ்சதும் ‘ரோகித்’ சொன்ன வார்த்தை.. ‘பாவம் மனுசன் மனசு உடைஞ்சி போய்ட்டாரு’..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக பேசியுள்ளார்.

தொடர்ந்து 6 தோல்வி.. மேட்ச் முடிஞ்சதும் ‘ரோகித்’ சொன்ன வார்த்தை.. ‘பாவம் மனுசன் மனசு உடைஞ்சி போய்ட்டாரு’..!

ஐபிஎல் தொடரின் 26-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 103* ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். மும்பை அணியை பொறுத்தவரை உனத்கட் 2 விக்கெட்டுகளும், ஃபேபியன் ஆலன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 6-வது தோல்வியை மும்பை அணி சந்தித்துள்ளது.

MI captain Rohit takes full responsibility for 6th consecutive loss

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்ம, ‘குறிப்பிட்ட ஒரு காரணத்தினால் தான் தோல்வி அடைந்தோம் என எதையும் சொல்ல முடியவில்லை. மிகப்பெரிய ரன் சேஸை நோக்கி விளையாடும் போதும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம். அதை நாங்கள் தவறவிட்டு விட்டோம். பும்ரா சிறப்பாகவே பந்து வீசினார். ஆனால் மற்ற பவுலர்களும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 6 போட்டியில் தோற்று விட்டோம் என்று தலையை தொங்கப்போட்டு சோர்வாக இருக்க மாட்டோம், அடுத்த போட்டியில் மீண்டும் வருவோம்.

இனி இதற்கு முன்பு நான் என்ன செய்தேனோ, அதையே மீண்டும் செய்ய போகிறேன். மைதானத்தில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பேன். இனிவரும் போட்டிகளிலும் அதையே பின்பற்ற உள்ளேன். அணியின் அனைத்து தோல்விகளுக்கும் நானே முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இந்த பிரச்சனை எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. இதுபோன்ற தோல்விகளை முன்பும் சந்தித்துள்ளோம். விரைவில் அதிலிருந்து மீண்டும் கம்பேக் கொடுப்போம்’ என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்