சண்டை போட்டு மெஸ்ஸிக்கு சான்ஸ் வாங்கிய பாட்டி.. "கோல் முடிச்சதும் வானத்தை பார்த்து கொண்டாடுறது இதுனால தான்".. சுவாரஸ்ய தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மெஸ்ஸியின் தலைமையில் தற்போது நடந்து முடிந்துள்ள கால்பந்து உலக கோப்பைத் தொடரை அர்ஜென்டினா அணி 36 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தி உள்ளது.

சண்டை போட்டு மெஸ்ஸிக்கு சான்ஸ் வாங்கிய பாட்டி.. "கோல் முடிச்சதும் வானத்தை பார்த்து கொண்டாடுறது இதுனால தான்".. சுவாரஸ்ய தகவல்

Also Read | கபடி, டான்ஸ்... இப்ப குத்துச் சண்டை.. ட்ரெண்டிங்கில் ' 'அமைச்சர்' & நடிகை ரோஜா!!

தனது அணியை தலைமை தாங்கியதுடன் நிறைய கோல்கள் அடித்து இறுதி போட்டியில் கோப்பையை கைப்பற்றவும் பெரிய பங்காற்றி இருந்தார் மெஸ்ஸி. அப்படிப்பட்ட மெஸ்ஸியின் கால்பந்து பயணத்திற்கு பின்னால் அவரது பாட்டியும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

தனது நான்கு வயதிலேயே கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு கொண்ட மெஸ்ஸி, குழந்தை பருவத்தில் தன்னுடைய சகோதரர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவர்களுடன் ஆடும் ஒரு சிறுவன் வராத காரணத்தினால் அவருக்கு பதிலாக மெஸ்ஸியை  விளையாட சேர்த்துக் கொள்ளுமாறு மெஸ்ஸியின் பாட்டி செலியா, அங்கிருந்த பயிற்சியாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் முதலில் மெஸ்ஸியின் உயரம் காரணமாக அவரை சேர்த்துக்கொள்ள பயிற்சியாளர் தயங்க, பாட்டியின் வற்புறுத்தலின் பெயரில் மெஸ்ஸியை அணியில் சேர்த்து கொண்டார்.

Messi celebration his grandmother support to achieve football

மெஸ்ஸியின் முதல் கால்பந்து போட்டியாக அது அமைந்திருந்தது. சிறப்பாக ஆடி 2 கோல்களை மெஸ்ஸி அடித்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவரைக் கண்டு அனைவரும் மிரண்டு போயினர். மெஸ்ஸியின் திறமையை அறிந்த அவரது பாட்டி செலியா, கால்பந்து விளையாட்டில் பேரன் முன்னோக்கி செல்ல, குடும்பத்தினருடன் சண்டை போட்டு ஷூ உள்ளிட்ட பொருட்களையும் வாங்கிக் கொடுத்து கால்பந்த்து போட்டியில் அவர் ஜொலிக்கவும் காரணமாக இருந்தார்.

அதே போல, முன்பு ஒரு முறை பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த போட்டியின் போது எதிர்பாராத விதமாக பாத்ரூமில் மெஸ்ஸி மாட்டிக் கொள்ள, அவர் இல்லாமலே ஆட்டம் தொடங்கியதாக தெரிகிறது. ஆனால் போட்டி ஆரம்பித்து சில நேரங்களில் பாத்ரூம் ஜன்னலை உடைத்துக் கொண்டு பாதி ஆட்டத்தில் வந்த மெஸ்ஸி, மாற்று வீரராக களமிறங்கி ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்திருந்தார்.

Messi celebration his grandmother support to achieve football

கால்பந்து போட்டிகளில் தனது திறனை மெஸ்ஸி வளர்த்து கொண்டே இருந்தாலும், அவரது ஹார்மோன் குறைபாடு பிரச்சனை மறுபக்கம் அவரை வருத்திக் கொண்டே தான் இருந்தது. அவரது மருத்துவ உதவிக்காக அர்ஜென்டினாவில் உள்ள கால்பந்து கிளப்களில் மகனின் உதவிக்காக மெஸ்ஸியின் தந்தை ஏறி இறங்கினார். ஆனால், யாரும்  உதவி செய்ய முன்வராத சூழலில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கிளப்பி மெஸ்ஸியை அணியில் சேர்த்து அவருக்கான மருத்துவ உதவி செலவையும் பார்த்துக் கொண்டது. தினமும் ஹார்மோன் குறைபாடுக்கான ஊசியை செலுத்திக் கொண்டே கால்பந்து விளையாட்டிலும் தன்னை வளர்த்திக் கொண்டார் மெஸ்ஸி.

2005 ஆம் ஆண்டில் பார்சிலோனா அணிக்காக ஆட தொடங்கிய மெஸ்ஸி, அடுத்தடுத்து சர்வதேச அணியிலும் இடம்பிடித்து இத்தனை ஆண்டுகளில் எக்கச்சக்க மேஜிக்குகளை கால்பந்து போட்டிகளில் படைத்துள்ளார்.

Messi celebration his grandmother support to achieve football

பொதுவாக ஒவ்வொரு போட்டியிலும் கோல் அடிக்கும் போது இரு கைகளையும் வானத்தை நோக்கி குறிப்பிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார் மெஸ்ஸி. இதற்கு காரணம், தனது பாட்டி செலியாவுக்காக தான் என தகவல்கள் தெரிவிக்கின்றது. கால்பந்து போட்டியில் தான் முன்னேறி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த பாட்டி செலியாவிற்காக ஒவ்வொரு கோலையும் அர்ப்பணிப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார் மெஸ்ஸி.

கால்பந்து போட்டிகளில் எக்கச்சக்கமான சாதனைகளையும் மெஸ்ஸி படைத்திருந்தாலும் உலககோப்பை கால்பந்து மட்டும் எட்டாக்கனியாக இருந்தது. அப்படி ஒரு சூழலில் தற்போது நடந்து முடிந்த கால்பந்து உலகக் கோப்பை தொடரில் அதனையும் கைப்பற்றி கால்பந்து உலகின் மற்றொரு ஜாம்பவானாகவும் உருவாகி உள்ளார் மெஸ்ஸி.

Also Read | "நான் ஒரு தாய் தான், ஆனா அதே நேரத்துல".. குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த பெண் MLA!!

MESSI, LIONEL MESSI

மற்ற செய்திகள்