FIFA WORLD CUP 2022 : அர்ஜென்டினா தோத்ததுக்கு கலங்கிய கேரள சிறுவன்.. கனவை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராவல் ஏஜென்சி..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமத்திய கிழக்கு நாடான கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் அரையிறுதி போட்டி சமீபத்தில் நடந்து முடிந்திருந்த நிலையில், அர்ஜென்டினா மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்த அர்ஜென்டினா அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேறி இருந்தது.
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளதால், அந்த அணி கால்பந்து உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என உலகளவில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
லீக் சுற்றில், சவூதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. இதனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி முன்னேறுமா என்றதும் திடீரென கேள்விக்குறியாகி இருந்தது. ஆனால், அதன் பின்னர் தொடர்ந்து வெற்றிகளை குவித்த அர்ஜென்டினா அணி, தற்போது இறுதி போட்டி வரை முன்னேறி உள்ளது, அந்த அணி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
குறிப்பாக, கால்பந்து ரசிகர்கள் அதிகமுள்ள கேரள மாநிலத்தில், அர்ஜென்டினா அணி வெற்றி பெறவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி, நிப்ராஸ் என்ற சிறுவன் அதிகம் வைரலாகி இருந்த நிலையில், தற்போது அவரை பற்றிய செய்தி ஒன்று, ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. சவூதி அரேபியா அணிக்கு எதிராக அர்ஜென்டினா தோல்வி அடைந்த சமயத்தில், கேரளாவை சேர்ந்த நிப்ராஸ் என்ற சிறுவன், மனம் கலங்குவது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி இருந்தது. மேலும் அர்ஜென்டினா அடுத்தடுத்து வென்று உலக கோப்பையை ஜெயிக்கும் என்றும் சிறுவன் நிப்ராஸ் மனவேதனையுடன் தெரிவித்திருந்தார்.
சிறு வயதிலேயே கால்பந்து போட்டியில் இந்த அளவுக்கு விருப்பத்தோடு பார்த்து கண்ணீரும் வடித்த காசர்கோடு சிறுவன் நிப்ராஸ் அதிக அளவில் கவனம் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து பையனூர் பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று, இன்ப அதிர்ச்சி ஒன்றை நிப்ராஸுக்கு கொடுத்திருந்தது. கத்தாரில் நடைபெறும் கால்பந்து தொடரில் அர்ஜென்டினா மோதவுள்ள போட்டியை காண அழைத்து செல்ல முடிவு செய்திருந்தது.
அப்படி ஒரு சூழலில், அர்ஜென்டினா போட்டியை சிறுவன் நிப்ராஸ் மைதானத்தில் இருந்து கண்டுகளித்து தொடர்பான வீடியோ, தற்போது அதிக கவனம் பெற்று வரும் நிலையில், சிறுவன் நிப்ராஸ் ஆசை நிறைவேறியதையும் கொண்டாடி வருகின்றனர்.
மறுபக்கம், இரண்டாவது அரை இறுதி போட்டியில், பிரான்ஸ் மற்றும் மொரோக்கா ஆகிய அணிகள் இன்று மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்