துண்டுச்சீட்டை காட்டி சீரியஸாக ‘டிஸ்கஸ்’ செய்த கோச்.. அப்படியென்ன பேசியிருப்பாங்க..? கவனம் பெறும் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்து முடிந்ததும் இந்திய அணியின் பயிற்சியாளர் துண்டுச்சீட்டில் ஏதோ எழுதிக் காண்பித்த போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்களும், ரோஹித் ஷர்மா 30 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ஏதோ எழுதி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆலோசகர் தோனியிடம் காண்பித்தார். இந்த போட்டோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
அதில், இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துவிட்டதால், அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் நெட் ரன்ரேட் அடிப்படையில் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Looking at the NRR calaculations 😂💛#WhistlePodu | #INDvsSCO pic.twitter.com/Zic3c8HKYN
— CSK Fans Army™ (@CSKFansArmy) November 5, 2021
இந்த இலக்கை 7.1 ஓவர்களில் அடித்தால் இந்தியாவின்நெட் ரன்ரேட் அதிகமாகிவிடும். இதைதான் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் துண்டுச்சீட்டில் கணக்கிட்டு வீரர்களிடம் காண்பித்ததாக தெரிகிறது. அதன்படி 6.3 ஓவர்களிலேயே இந்தியா வெற்றி பெற்றது. இதன்காரணமாக இந்தியாவின் நெட் ரன்ரேட் +1.619 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்