"இது உனக்கே நியாயமா இருக்கா ஸ்டியோனிஸ்??"... திடீரென 'RCB' 'டீம்'க்கு வந்த சோதனை... வைரலாகும் 'மீம்ஸ்'கள்,,.. காரணம் என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேபிட்டல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாற்றம் கண்டது.

"இது உனக்கே நியாயமா இருக்கா ஸ்டியோனிஸ்??"... திடீரென 'RCB' 'டீம்'க்கு வந்த சோதனை... வைரலாகும் 'மீம்ஸ்'கள்,,.. காரணம் என்ன??

மிக குறைவான ரன்களையே டெல்லி அணி பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கும் என நினைத்த நிலையில், கடைசி கட்டத்தில் டெல்லி வீரர் ஸ்டியோனிஸ் அதிரடி காட்டியதால் 157 ரன்களை டெல்லி அணி 20 ஓவர்களில் எடுத்தது. அவர் 21 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.

ஸ்டியோனிஸ் கடந்த ஆண்டு பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காக ஆடிய நிலையில், இந்தாண்டு அவரை பெங்களூர் அணியிலிருந்து இறக்கி விட்டது. ஏலத்தின் போது அவரை டெல்லி அணி விலைக்கு வாங்கியது. கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக ஸ்டியோனிஸ் ஆடிய போது, ஒட்டுமொத்தமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவரை அணியில் இருந்து பெங்களூர் அணி வெளியேற்றியது.

ஆனால், டெல்லி அணிக்காக அவர் களம் கண்ட முதல் ஆட்டத்திலேயே அதிரடியாக ஆடி, டெல்லி அணி சிறந்த ரன்களை குவிக்க உதவியுள்ளார். இதன் காரணமாக, ஸ்டியோனிஸ் குறித்த மீம்ஸ்கள் இணையதளங்களில் அதிகம் வலம் வந்த வண்ணம் உள்ளன. பொதுவாக அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் பெங்களூர், சிறந்த அணியைக் கொண்ட போதிலும் ஐபிஎல் தொடரை இதுவரை வென்றதில்லை.

இந்த முறை பெங்களூர் அணி கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பெங்களூர் அணியில் இருந்து வெளியேறிய வீரர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்பாக மீம்ஸ்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 

 

 

முன்னதாக, பெங்களூர் அணியில் ஆடிய வாட்சன் அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வரும் நிலையில், சென்னைக்காக மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே போல, பெங்களூர் அணிக்காக ஆடிய ராகுல் அங்கிருந்து வெளியேறி பஞ்சாப் அணிக்காக ஆடிய முதல் தொடரிலேயே அதிக ரன்கள் அடித்தார். அதே போல தற்போது, ஸ்டியோனிஸ் டெல்லி அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

மற்ற செய்திகள்