அன்னைக்கு 'சச்சின்' பேசுனத கேட்டு... நானும் கெய்லும் அழுதுட்டோம்... உருகிப் போன வெஸ்ட் இண்டீஸ் 'வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் உலகில் தன்னிகரற்ற வீரராக திகழ்ந்த இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகிலிருந்து ஒய்வு பெற்றார்.

அன்னைக்கு 'சச்சின்' பேசுனத கேட்டு... நானும் கெய்லும் அழுதுட்டோம்... உருகிப் போன வெஸ்ட் இண்டீஸ் 'வீரர்'!

சச்சின் பங்கேற்ற கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை அபாரமாக வீழ்த்தி, வெற்றி பெற்றதுடன் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நீண்ட உரை ஒன்றை ஆற்றினார். சச்சினின் பேச்சைக் கேட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கண்கலங்கி நின்றனர்.

இந்த போட்டியின் நினைவுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிர்க் எட்வர்ட்ஸ் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். 'சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது நானும் அங்கிருந்தேன். சச்சின் உரையாற்றும் போது நான் கண்ணாடி போட்டுக் கொண்டேன். அப்போது என் அருகில் க்றிஸ் கெயில் நின்று கொண்டிருந்தார். அப்போது எங்களால் முடிந்த வரை கண்ணீர் சிந்தாமல் பார்த்துக் கொண்டோம். மிகவும் உணர்ச்சிமிக்க தருணம் அது' என்றார்.

மேலும், 'இனியும் அந்த மனிதனை கிரிக்கெட் மைதானத்தில் பார்க்க முடியாது என்ற வருத்தம் தான். அந்த போட்டியில் ஆடும் லெவன் அணியில் நான் ஆடவில்லை. ஆனால் சச்சினுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது சிறிய தடுமாற்றம் ஏற்பட்டதும் சச்சின் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். 'இது போன்ற கடினமான சூழ்நிலை வருவது சகஜம் தான். ஆனால் தளர்ந்து விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்' என அறிவுரை கூறியதாக தனது நினைவலைகளை எட்வர்ட்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்