ET Others

கிரிக்கெட்டில் காலம் காலமாக இருந்த பழக்கத்தை மாற்றப் போகும் ஐசிசி… ஏன் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் விதிகளில் மாற்றம் கொண்டுவர உருவாக்கப்பட்ட MCC என்ற அமைப்பு சில விதிகளில் மாற்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

கிரிக்கெட்டில் காலம் காலமாக இருந்த பழக்கத்தை மாற்றப் போகும் ஐசிசி… ஏன் தெரியுமா?

வாக்கிங் போன மனைவிய காணோம்.. புகார் கொடுத்த கணவன்.. புதருக்குள்ள இருந்து கேட்ட செல்போன் சத்தம்..மாஸ்டர் பிளானை கண்டுபிடித்த போலீஸ்..!

விதிமுறைகள் மாற்றம்

கிரிக்கெட்டில் இருக்கும் விதிமுறைகளில் மாற்றுவது அல்லது திருத்துவது போன்றவற்றை செய்ய MCC என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சமீபகாலமாக பல திருத்தங்களைப் பரிந்துரைத்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் போட்டிகளில் 25 ஓவருக்குப் பதில் புதிய பந்தைப் பயன்படுத்திக் கொள்ளுதல், நோபாலுக்கு ப்ரீ ஹிட் வழங்குவது, பவர் ப்ளே ஓவர்களை விளையாடும் அணிகள் தேர்வு செய்வது என பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

மன்கட் சர்ச்சை

அந்த வகையில் இப்போது கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையான ஒன்றாக கருதப்படும் மன்கட் முறையில் அவுட் ஆக்குவது குறித்து புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் மன்கட் முறையில் அவுட்டாக்குவது ரன் அவுட்டாகவே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட்டின் ஸ்பிரிட் இந்த முறையால் இல்லாமல் போகிறது என்ற விமர்சனங்களுக்கு முடிவு வந்துள்ளது.

MCC changed the cricket laws mankad method

அஸ்வினால் நடந்த மாற்றம்

இந்த மன்கட் சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக பேசுபொருளாக இருப்பதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முக்கியமானக் காரணமாக அமைந்தார். ஐபிஎல் போட்டியில் அவர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் ஆக்கிய போது பலரும் அவர் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை கெடுத்துவிட்டார் என்று விமர்சனங்களை வைத்தனர். ஆனால் அஷ்வின் தொடர்ந்து தான் செய்தது சரிதான் என்று கூறி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் இப்போது MCC-ன் பரிந்துரையை அடுத்து பலரும் அஸ்வினை பாராட்டி வருகின்றனர்.

ஏன் இந்த பெயர்

பவுலர் பந்தை வீசுவதற்குள் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு நகரக்கூடாது. அப்படி சென்றால் பவுலர் ஸ்டம்பை தட்டி விக்கெட் கோரலாம். சில நேரம்  முதலில் வார்னிங் கொடுத்துவிட்டு பின்னர் விக்கெட் கேட்பார்கள். இந்த முறையை முதன் முதலில் இந்திய அணியின் வினோ மன்கட் 1947 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயன்படுத்தி பில் பிரௌன் என்பவரை அவுட் ஆக்கினார். அப்போதும் அவர் செய்தது சர்ச்சையைக் கிளப்பியது. அன்றிலிருந்து அந்த முறை மன்கட்டிங் என அழைக்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த முறை ரன் அவுட் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளது,

MCC changed the cricket laws mankad method

பந்துகளில் எச்சிலுக்கு தடை

அதுபோல மற்றொரு புதிய விதியையும் MCC பரிந்துரை செய்துள்ளது. அது என்னவென்றால் பந்தில் இனிமேல் எக்காரணம் கொண்டும் எச்சில் தடவக் கூடாது. இந்த பழக்கமானது கிரிக்கெட் தொடங்கியதில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பந்தில் க்ரிப் கிடைப்பதற்காக இதை வீரர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது கொரோனா காரணமாக இந்த முறைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இப்போது முழுவதுமாக அதை தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய விதிமுறைகளும் அக்டோபர் மாதம் நடக்கும் டி 20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

MCC changed the cricket laws mankad method

கையில் மூட்டை.. எல்லையில் நின்று கதறி அழுத்த உக்ரைன் சிறுவன்.. மனசாட்சியை உலுக்கும் வீடியோ..!

CRICKET, MCC, CRICKET LAWS, MANKAD METHOD, ICC, கிரிக்கெட் விதிமுறைகள், மன்கட் சர்ச்சை, ஐசிசி

மற்ற செய்திகள்