நான் இந்தியா'ல பொறந்து இருந்தா.. சில நேரம் கிரிக்கெட்டே ஆட முடியாம போயிருக்கலாம்.. ஏபிடி சொன்ன காரணம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார்.
சர்வதேச போட்டியில் ஏற்கனவே ஓய்வினை அறிவித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு பிறகு, ஐபிஎல் உள்ளிட்ட மற்ற டி 20 லீக் தொடர்களில் இருந்தும் தனது ஓய்வு முடிவினை அறிவித்து விட்டார்.
ஏபிடி - கோலி
கிரிக்கெட் மைதானத்தில் எந்த பக்கத்திலும் திருப்பி திருப்பி பந்துகளை பறக்க விடும், டிவில்லியஸிற்கு Mr. 360 என்ற பெயரும் உண்டு. இவருக்கு, இந்தியாவிலும் ஐபிஎல் தொடர் மூலம் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். பெங்களூர் அணியில், கோலியுடன் இணைந்து பல ஆண்டுகள் ஆடிய டிவில்லியர்ஸ், பல போட்டிகளிலும், தன்னுடைய அதிரடி ஆட்டத்தால், அந்த அணியை வென்று கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியான ரசிகர்கள்
ஆட்டம் என்பதை எல்லாம் தாண்டி, கோலி மற்றும் பெங்களூர் அணியுடன் டிவில்லியர்ஸுக்கு இருக்கும் பந்தம், மிகப் பெரியது. உதாரணத்திற்கு, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், டிவில்லியர்ஸ் பங்கு பெறப் போவதில்லை என அறிவித்ததுமே, ஆர்சிபி ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், அவர் ஆடமாட்டார் என்பதால், ரசிகர்கள் சோகத்திலும் உறைந்து போயிருந்தனர்.
பாக்கியம்
அந்த அளவுக்கு ஒரு குடும்பம் போல, பெங்களூர் அணியில் வலம் வந்தவர் டிவில்லியர்ஸ். இந்நிலையில், சமீபத்தில் இந்திய அணி மற்றும் அதன் ரசிகர்கள் குறித்து பேசிய டிவில்லயர்ஸ், 'கடந்த 15 ஆண்டுகளாக, ஐபிஎல் போட்டி மற்றும் இந்திய ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு மற்றும் அவர்கள் கொண்டாடும் விதத்தையும் அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
கிரிக்கெட் ஆடாமல் போயிருப்பேன்
நிச்சயமாக, இந்தியாவில் வளர்வது சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அப்படி இங்கு நான் வளர்ந்திருந்தால், ஒரு வேளை, நான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட முடியாமல் கூட போயிருக்கும். இந்திய அணியில் இடம்பெறுவது என்பது, மிகவும் கடினமாக ஒன்றாகும். நீங்கள் ஒரு ஸ்பெஷல் பிளேயராக இருந்தால் தான் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும்' என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன?
இந்தியாவில், லட்ச கணக்கான பேர், கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டு, இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதையே கனவாகவும், லட்சியமாகவும் கொண்டு வாழ்கின்றனர். அப்படி இருக்கும் போது, தான் இந்தியாவில் பிறந்திருந்தால், தன்னைச் சுற்றி, போட்டிகள் அதிகம் உருவாகி, தன்னால் கிரிக்கெட் ஆட முடியாமல் போயிருக்கும் என்பதைத் தான் டிவில்லியர்ஸ் அப்படி குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த காலங்கள்
மேலும், ஆர்சிபி அணிக்கும், தனக்கும் இடையேயான பந்தம் பற்றி பேசிய டிவில்லியர்ஸ், 'எனக்கு ஆர்சிபி ஒரு குடும்பம் போன்றது. அதாவது, என்னுடைய வாழ்க்கையை மாற்றிய 10 முதல் 11 வருடங்கள், பெங்களூர் அணியில் ஆடிய காலங்களாகும். மற்ற குடும்பத்தினை போல, அங்கும் ஏற்ற, இறக்கங்கள் இருந்தன. மிகவும் அழகான, அற்புதமான தருணங்களும் இருந்தன. ஆர்சிபி அணிக்காக நான் ஆடிய காலங்கள், எனது வாழ்வின் சிறந்த காலங்கள் என நான் நினைக்கிறேன்' என நெகிழ்ச்சியுடன் டிவில்லயர்ஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்