பந்து போடுற ஸ்டைலே ஒரு மார்க்கமா இருக்கே.. இந்திய வீராங்கனையின் வித்தியாசமான சூழலில் க்ளீன் போல்டான நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமகாராஷ்டிராவை சேர்ந்த மாயா சோனாவனே என்னும் இளம் வீராங்கனை வித்தியாசமான முறையில் பந்து வீசும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | உலக நாடுகளுக்கு பரவிய புதிய வகை குரங்கு அம்மை... தடுப்பூசி இருக்கா..? நிபுணர்கள் சொல்வது என்ன?
மகளிர் T20 சேலஞ்ச்
2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 சேலஞ்ச் போட்டிகள் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. 2018 ஆம் ஆண்டு முதன் முதலில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் இரண்டு அணிகள் பங்கேற்றன. சூப்பர்நோவா அணியை ஸ்ம்ரிதி மந்தனாவும் ட்ரைல் பிளாஸர்ஸ் அணியை ஹர்மன் பிரீத் கவுரும் தலைமை தாங்கினர். முதல் கோப்பையை சூப்பர் நோவா அணி தட்டிச் சென்றது.
இந்த வருடத்திற்கான தொடரில் 3 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சூப்பர்நோவா அணியை ஹர்மன்பிரீத் கவுரும், ட்ரைல் பிளாஸர்ஸ் அணியை ஸ்ம்ரிதி மந்தனாவும், வெலாசிட்டி அணியை தீப்தி ஷர்மாவும் தலைமை தாங்குகின்றனர்.
மாயா சோனாவனே
தற்போது நடைபெற்றுவரும் மகளிர் T20 சேலஞ்ச் தொடரில் இரண்டாவது போட்டியில் சூப்பர் நோவா அணியும் வெலாசிட்டி அணியும் களம்கண்டன. இந்தப் போட்டியில், வெலாசிட்டி அணியின் சுழற்பந்து வீச்சாளரான மாயா சோனாவனே வித்தியாசமான முறையில் பந்து வீசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
முன்னதாக, சீனியர் மகளிர் டி20 போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனாவனே, 8 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாகவும் மாயா அறியப்பட்டார்.
கமெண்ட்
மாயா சோனாவனே வித்தியாசமாக பந்து வீசும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மாயாவின் வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன் குறித்து நெட்டிசன்கள்,"அவர் தென் ஆப்பிரிக்க வீரர் பால் ஆடம்ஸ் போல பந்து வீசுகிறார்" எனவும், "குஜராத் லயன்ஸ் அணியின் ஷிவில் கவுஷிக் போலவே பவுலிங் செய்கிறார்" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Debut for 23 year old leg spinner from Maharashtra, Maya Sonawane#My11CircleWT20C#WomensT20Challenge2022 pic.twitter.com/IRylJ62EGx
— WomensCricCraze🏏( Womens T20 Challenge) (@WomensCricCraze) May 24, 2022
Also Read | ஆனந்த் மஹிந்திராவுக்கு அமெரிக்காவில் கிடைத்த கவுரவம்.. நெகிழ்ச்சியில் போட்ட ட்வீட்..!
மற்ற செய்திகள்