இன்னும் 'ஐபிஎல்' கூட ஆரம்பிக்கல... அதுக்குள் 'Start' பண்ணிட்டாங்களா??.. தேவையில்லாம 'கிண்டல்' பண்ண போய்... வாங்கி கட்டிக் கொண்ட 'மேக்ஸ்வெல்'... வைரலாகும் 'ட்வீட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.

இன்னும் 'ஐபிஎல்' கூட ஆரம்பிக்கல... அதுக்குள் 'Start' பண்ணிட்டாங்களா??.. தேவையில்லாம 'கிண்டல்' பண்ண போய்... வாங்கி கட்டிக் கொண்ட 'மேக்ஸ்வெல்'... வைரலாகும் 'ட்வீட்'!!

இதற்காக, ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள், இந்தியா வந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். மேலும் சில வீரர்கள், ஏப்ரல் முதல் வாரத்தில் தங்களது அணியுடன் இணையவுள்ளனர். மேலும், இந்தாண்டு தொடருக்கான ஐபிஎல் ஏலத்தில், நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷாமை (Jimmi Neesham) மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் ரசிகர் ஒருவர், நீஷாமிடம், 'நீங்கள் எப்போது மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியுடன் இணைவீர்கள்?' என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நீஷாம், 'நான் வருகிறேன், ஆனால் இந்த சரக்கு கப்பல் (சூயஸ் கால்வாய்) காரணமாக நான் சிக்கிக் கொண்டேன்' என பதில் தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து, நீஷாமின் ட்வீட்டை பகிர்ந்த ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), 'கடினமாக சுமக்கும் 46,44,46 போன்ற பைகள், நீஷாமிடம் இருக்கக் கூடும்' என கிண்டலாக கூறியிருந்தார்.

இந்த எண்ணிற்கு காரணம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி 20 தொடரின் மூன்றாவது போட்டியில், நீஷாம் வீசிய ஒரே ஓவரில், மேக்ஸ்வெல் 4,6,4,4,4,6 என மொத்தம் 28 ரன்கள் அடித்திருந்தார்.

 

இதனைத் தான் மேக்ஸ்வெல் குறிப்பிட்டு கிண்டல் செய்திருந்தார். இதனைக் கண்ட நீஷாம், பதிலுக்கு வேற லெவலில் மேக்ஸ்வெல்லை கலாய்த்துள்ளார். அதாவது, அந்த டி 20 தொடரை நியூசிலாந்து அணி தான் 3 - 2 என்ற கணக்கில் வென்றிருந்தது. இதனால், தாங்கள் வென்று கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மேக்ஸ்வெல்லிற்கு தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.

 

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே இரு கிரிக்கெட் வீரர்கள், மாறி மாறிக் கிண்டல் செய்து கொண்ட ட்வீட்கள், நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், மேக்ஸ்வெல் மற்றும் நீஷாம் ஆகியோர் பஞ்சாப் அணியில் ஒன்றாக ஆடியிருந்த நிலையில், மேக்ஸ்வெல்லை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், நீஷாமை மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்