என்னய்யா இது .. ‘பந்து ஸ்டம்பில் பட்டும் இப்படி ஆகிடுச்சு...’.. எஸ்கேப் ஆன மேக்ஸ்வெல்.. நொந்துபோன ரஷித் கான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டம்பில் பந்து பட்டும் மேக்ஸ்வெல் அவுட் ஆகாது வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Also Read | IPL இறுதிப்போட்டியில் திடீர் மாற்றம்.. 30 நிமிஷம் லேட்டா தான் மேட்ச் ஆரம்பிக்கும்.. என்ன காரணம்..?
ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டு பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 62 ரன்களும், டேவிட் மில்லர் 34 ரன்களும், சாஹா 31 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 18.4 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்களும், கேப்டன் டு பிளஸிஸ் 44 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்தனர். இதில் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இப்போட்டியில் பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்த போது தம்பி ஸ்டம்பில் பட்டும் அவர் அவுட் ஆகவில்லை. அதில் போட்டியின் 15- வது ஓவரை குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசினார். அந்த ஓவரில் டு பிளஸிஸ் அவுட்டாகி வெளியேற, அடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கினார். மேக்ஸ்வெல் எதிர்கொண்ட முதல் பந்தே ஸ்டம்பில் பட்டது. அதனால் அவுட் என ரஷித் கான் உற்சாகம் அடைந்தார்.
ஆனால் ஸ்டம்பில் இருந்து பைல்ஸ் கீழே விழவில்லை, அதனால் இது அவுட் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 40 ரன்கள் விளாசி பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Your tweet was quoted in an article by Sportscafe https://t.co/QH7nSIh1mP
— Recite Social (@ReciteSocial) May 19, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்