‘3 வருஷ காதல்’.. இந்திய வம்சாவளி பெண்ணை கரம் பிடிக்கும் மேக்ஸ்வெல்.. விமர்சையாக நடந்த நிச்சயதார்த்தம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி ராமனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

‘3 வருஷ காதல்’.. இந்திய வம்சாவளி பெண்ணை கரம் பிடிக்கும் மேக்ஸ்வெல்.. விமர்சையாக நடந்த நிச்சயதார்த்தம்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், அந்த அணியின் சார்பாக பல சர்வதேச போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். இவர் அண்மையில் தனக்கு மனிரீதியாக பிரச்சனை இருப்பதாகவும், அதனால் தற்காலிக ஓய்வு வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கோரியிருந்தார். தற்போது சர்வதேச அணியில் இடம்பெறவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண்ணான வினி ராமன் என்பவரை மேக்ஸ்வெல் காதலித்து வந்தார். கடந்த 3 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் பல இடங்களுக்கு ஜோடியாக சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். மேக்ஸ்வெல் மன அழுத்தத்தில் இருந்து மீள வினி ராமனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இருவரும் மோதிரம் அணிந்த புகைப்படம் ஒன்றை மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மேக்ஸ்வெல்லுக்கும், வினு ராமனுக்கு இந்திய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்திய பாரம்பரிய உடையில் இருக்கும் இருவரின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

CRICKET, ICC, MAXWELL, VINIRAMAN, ENGAGEMENT, LOVE