‘நாங்களும் மனுசங்கதான்’.. இந்த மாதிரி யாராவது பண்ணா உடனே ‘Block’ பண்ணிடுவேன்.. செம ‘கடுப்பான’ மேக்ஸ்வெல்.. என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.

‘நாங்களும் மனுசங்கதான்’.. இந்த மாதிரி யாராவது பண்ணா உடனே ‘Block’ பண்ணிடுவேன்.. செம ‘கடுப்பான’ மேக்ஸ்வெல்.. என்ன நடந்தது..?

ஐபிஎல் (IPL) தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்தது.

Maxwell calls out social media trolls after RCB’s loss to KKR

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியது. இது அந்த அணியின் ரசிகர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பலரும் சமூக வலைதளங்களில் பெங்களூரு அணி வீரர்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Maxwell calls out social media trolls after RCB’s loss to KKR

குறிப்பாக பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியனை (Daniel Christian) ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு காரணம், இப்போட்டியில் டேனியல் கிறிஸ்டியன் வீசிய 12-வது ஓவரில் 22 ரன்கள் சென்றது. இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பெங்களூரு அணி தோல்வியடைய இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

Maxwell calls out social media trolls after RCB’s loss to KKR

இந்த நிலையில், ரசிகர்களின் விமர்சனத்துக்கு பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல் (Maxwell) தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘ஆர்சிபி அணிக்கு இது சிறந்த ஐபிஎல் தொடர். ஆனால் துரதிருஷ்டவசமாக நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்த தோல்விக்காக சிலர் சமூக வலைதளங்களில் அருவருப்பான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாங்களும் மனிதர்கள்தான், ஒவ்வொரு நாளும் எங்களால் முடிந்த பங்களிப்பை செய்து வருகிறோம். இதுபோன்ற செய்திகளை பரப்புவதற்கு பதிலாக, நல்ல மனிதர்களாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும், ‘எங்களிடம் அன்பை பகிர்ந்துகொண்ட உண்மையான ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைதளங்களில் பயங்கரமான சில மனிதர்கள் உள்ளனர். அவர்களின் கொச்சையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது நண்பர்களையும், சக வீரர்களையும் விமர்சித்தால் உடனே பிளாக் செய்யப்படுவீர்கள்’ என மேக்ஸ்வெல் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்